உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அய்ந்தாண்டுத் திட்டம் : கல்வித் திட்டத்தை உருவாக்கினேன் 131 ‘எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் பதினான்கு வயது முடிவு இலவசக் கட்டாயக் கல்விக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்கிறது அதைத் திசை காட்டியாகக் கொண்டேன். 'அது பத்தாண்டுகளில் முடிய வேண்டும்’ என்பது, அச் சட்டத்தில் கண்டுள்ள நெறிக் கொள்கையாகும். பள்ளியில் சேர்க்கும் பெருமுயற்சியில், பதினான்கு வயதுக்கு உட்பட்ட எல்லோரையும் உந்துவதா? "பதின்மூன்று, பதினான்கு வயதுச் சிறுவர்களை முதன்முதல் அய்ந்து வயதுப் பிள்ளைகளோடு உட்கார வைத்துப் பாடம் சொல்வது முறையல்ல என்றார்கள் ஆசிரியர்களும் ஆய்வாளர் களும். குறிப்புகள் ஏதும் வைத்துக் கொள்ளாமல், உரத்துச் சிந்தித்தவர்களின் மொத்தக் கருத்து என்ன? பள்ளிக்கூடம் இல்லாத எல்லாச் சிற்றுார்களுக்கும் தொடக்கப் பள்ளி கொடுப்பது, முதல் நடவடிக்கை பெரிய ஊர்களுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் தாராளமாக, தொடக்கப் பள்ளிகளைக் கூடுதலாகக் கொடுத்தல். அடுத்து, அய்ந்து வயது நிரம்பிய எல்லாச் சிறுவர் சிறுமி. யரையும் பள்ளியில் சேர்க்க முயலுதல்! புதிய ஆர்வம் காரணமாக அதற்கு மேற்பட்ட வயதினர் பள்ளியில் சேர வந்தால், அவர்கள் அதிக வயதை அடையாதிருந்தால், உரிய வகுப்பில் சேர்த்துச் கொள்ளல். அய்ந்து வயது நிரம்பியவர்களில் நூற்றுக்கு எண்பதுபேர். களையாவது முதல் ஆண்டிலேயே சேர்த்து விடுதல். அப்படிச் சேர்ந்தவர்கள் நடுவில் பள்ளியை விட்டு விலகிவிடாதபடி பிரசாரம் செய்தல். அய்ந்தாம் வகுப்பில் படிப்போரில் நூற்றுக்கு எண்பது தொண்ணுாறு விழுக்காட்டினராவது, தொடர்ந்து ஆறாம் வகுப்பில் படிக்கும்படி பார்த்துக் கொள்ளல். இப்படியே முதல் ஆண்டில் முதல் வகுப்பில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு இரண்டாம் ஆண்டில் தொடர்ந்து படிக்கும்படி செய்தல். இம் முயற்சியில் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறோமோ அந்த அளவிற்கு, கற்போர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/170&oldid=787955" இலிருந்து மீள்விக்கப்பட்டது