உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 -- நினைவு அலைகள் “சென்னை மாகாணத்தின் வறியோர் விழுக்காடும் அதேதான்! “நாட்டுப் புறங்களில் வறியோர் விழுக்காடு அதிகமாக இருக்கலாம். “எனவே, மூவரில் ஒருவருக்குப் பகல் உணவு போடும் குறியீட்டின் பேரில் செலவு கணக்கிடப்பட்டுள்ளது. “எத்தனை நாள்களுக்குப் போடுவது? “பள்ளிக்கூடம் நடக்கும் நாள்களில் மட்டும் போடுவது. "சாப்பாடு ஒன்றுக்கு எவ்வளவு செலவு ஆகும்? “இதற்கும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை வழிகாட்டியாகக் கொண்டு கணக்கிட்டு இருக்கிறோம். “மாநகராட்சிப் பள்ளிகளில், சாம்பார் சோறும் மோர்ச் சோறும் நாள்தோறும் போட்டு வருகிறார்கள். “அந்தச் செலவு எவ்வளவு? “வேளைக்கு ஒன்றரை அணா இன்றைய பத்துக் காசுகள். "பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர்கள் படிக்கும் நிலை பத்தாண்டுகளில் உருவாகும்’ என்று உத்தேசம். "அப்போது எவ்வளவு பேர் படிப்பார்கள்?’ என்று கணக்கிட்டோம். "அவர்களில் மூன்றில் ஒருவருக்கு, உணவு கொடுப்பது என்று மதிப்பிட்டு இருக்கிறோம். நிதானமாகவே திட்டமிட்டது “தொடக்கத்தில், எந்த ஒர் ஆண்டிலும் எல்லாப் பள்ளிகளிலும் ஏழைப் பிள்ளைகளுக்கு உணவு அளிக்கும் ஆத்திரத்தோடு திட்டமிடப்படவில்லை. "ஒரு அய்ந்தாண்டுகளில், எல்லாப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் வகையில், படிப்படியாக வளர்ப்பதே நோக்கம். “கல்வித்துறை தீட்டிய திட்டப்படி, முதல் ஆண்டில் செலவு பத்து இலட்சம் ரூபாய்களுக்குள் அடங்கும். i. “அடுத்த ஆண்டு, இந்தச்செலவு இரட்டிப்பிற்குமேல் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/179&oldid=787964" இலிருந்து மீள்விக்கப்பட்டது