உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uso o smro!5 áltim: osmunistronolulf obtis. 141 “இப்படியே உயர்ந்து கொண்டுபோய், அய்ந்தாண்டுகளில் ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் செலவு ஆகும். “இத் திட்டம் இருந்தால்தான், நாம் சேர்க்கைக் குறியீட்டை எட்ட முடியும். “இல்லாவிட்டால், பழையபடி தொடக்கப் படிப்பும் ஏழைகளுக்கு எட்டாமலேயே போய்விடும்” என்று அமைதியாக விளக்கினேன். நிதிக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் காமராசரோ, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமோ வேறு அமைச்சர்களோ வாய் திறப்பதற்குமுன்பு அங்கு அமர்ந்திருந்த மூத்த செயலர்களில் ஒருவராகிய வருவாய்த்துறைச் செயலர் திரு. ஆர். எம். சுந்தரம் அய். சி. எஸ். குறுக்கிட்டார். திட்டத்தைக் கைவிடுவீர்! “இது இன்று எனக்குச் சம்பந்தமில்லாதது. ஒரு காலத்தில் இத்தகைய திட்டத்தோடு எனக்குத் தொடர்பு இருந்தது. “சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் “லேபர் கமிஷனராக இருந்தேன். "அப்போது, அரிசனப் பள்ளிகளில் பகல் உணவுத் திட்டம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. 'அதன் நடைமுறையைக் கண்காணித்தவன் என்ற முறையில், சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். "அப் பள்ளிகளில் போட்ட பகல் உணவால், காண்ட்ராக்டர்கள் பிழைத்தார்கள். ஆசிரியர்கள் பிழைத்தார்கள். சிறுவர் சிறுமியருக்குக் கிடைத்த பலன் அளவில் மிகச் சிறிது. "ஒராயிரம் பள்ளிகளில் விரயமாவதைப் பத்துப் பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டாமென்று சொல்லுவது என் கடமை. இத் திட்டத்தைக் கைவிட்டு விடுவதே நல்லது” என்று சொல்லி முடித்தார். காமராசரின் பதில் நொடியில், முதலமைச்சர் காமராசர் அதற்குப் பதில் கூறினார். வெகுளாமல், சிரித்தபடியே பதில் கூறினார். அது எனக்கு இடும் கட்டளையாக உருவெடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/180&oldid=787965" இலிருந்து மீள்விக்கப்பட்டது