உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நினைவு அலைகள் "இயக்குநர் இதைக் குறித்துக் கொள்ளட்டும். விரிவான ஆணை பிறப்பிக்கையில், மறந்துவிடாமல் இதையும் ஆணையில் சேருங்கள். “பள்ளிப்பகல் உணவுத் திட்டத்தைக் காண்ட்ராக்ட்முறையில் நடத்தக்கூடாது. வேறு வகையில் எப்படி நடத்தலாமென்று யோசித்துச் சொல்லுங்கள்” இவ்வாணையைக் கூறி முடித்ததும் tண்டும் ஆர். எம். சுந்தரம் அய். சி. எஸ். குறுக்கிட்டார். “மாணாக்கர்களுக்குச் சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்கள் சாப்பிட்டு விடுவார்கள், மாணாக்கருக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்” என்றார். மீண்டும் முதலமைச்சர் சிரித்த முகத்தோடு, பதில் கூறினார். “உங்கள் திட்டத்தில் ஞாபகமாக, ஒரு விதி சேர்த்துவிடுங்கள் பகல் உணவுத் திட்டத்தை நடத்தும் ஆசிரியர்களும் பிள்ளை. களோடு சேர்ந்து சாப்பிடலாம். அந்தக் கூடுதல் சாப்பாட்டுச் செலவு, நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளப்படும்” என்றார். பகல் உணவுத் திட்டம் ஏற்கப்பட்டது அப்புறம் எவரும் குறுக்கிடவில்லை. முதலமைச்சர் காமராசர், 'பகல் உணவுத் திட்டத்தைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கான மதிப்பீட்டுக் கணக்கை நிதிச் செயலர் தணிக்கை செய்து, நிதி ஒதுக்கப் பரிந்துரைக்கலாம்” என்றார். நிதிச் செயலர் டி. ஏ. வர்கீஸ் பளிச்சென்று பதில் கூறினார் “மதிப்பீட்டின் விவரங்களைச் சரிபார்த்துவிட்டேன். கனக்கு சரியே. ஆகவே, கேட்ட நிதியை வரவு செலவு திட்டத்தில் சேர்த்துவிடலாம்” என்றார். அப்புறம் புதிய பள்ளிகள் இத்தனை, புதிய சேர்க்கை இத்தனை இலட்சம் என்று பல நிலைகளுக்கும் போட்டிருந்த திட்டங்களை, நிதிக் குழு ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டது. முதியோர் கல்வித் திட்டம் தடைப்பட்டது ஒவ்வொன்றையும் ஒப்புக்கொண்டே வருகையில், முதியோர் பள்ளிகளுக்கான திட்டம் வந்தது. அப்போது ஒரு பெரிய அரசு அலுவலர் குறுக்கிட்டார். "ஒமந்துார் ராமசாமி செட்டியார் முதலமைச்சராகவும், தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராகவும் இருந்த போது, முதியோர் பள்ளிகள் பல தொடங்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/181&oldid=787966" இலிருந்து மீள்விக்கப்பட்டது