உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லியின் ஒப்புதல் -- 143 அவை இராப்பள்ளிகள் ஆயின. முதியோர் எழுத்தறிவு முயற்சி, கானல் நீரைத் தேடுவது போலாகும்.”இப்படி ஒர் அலுவலர் கூறினார். முன்னே, சம்பந்தமில்லாத ஒருவர் குறுக்கிட்டதைப் பின் பற்றி, பின்னே ஓர் அலுவலரும் குறுக்கிட்டார். - அவரைக் குறை கூறாமல், “முதியோர் கல்வி முயற்சியை மீண்டும் தொடங்க வேண்டும்” என்று தொடங்கினேன். கல்வி அமைச்சர், கண்ச்ாடை காட்டினார்; பேசாமல் இருந்தேன். “அடுத்ததற்குப் போங்கள்” என்பது தலைவரின் ஆணை. பகல் உணவுத் திட்டத்தைச் சேர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றதைக் கண்டு பொருமிய பெரியவர்களுக்கு, முதியோர் கல்வி பற்றிய எனதுதோல்வி நிறைவைக் கொடுத்தது, வெளிப்படையாகத் தெரிந்தது. முதியோர் எழுத்தறிவுத் திட்டத்தைத் தொடங்காமல் போனது பெருங்குறை! அதுபற்றி ஊரறியச் சொல்ல, அரசு அலுவலருக்கு ஏது உரிமை? அரசு ஏற்றுக் கொண்டவற்றைச் செம்மையாக நிறைவேற்ற முழு உரிமை கொடுத்ததே பெருந்தன்மை ஆகும். பகல் உணவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தொடரும் என்று எதிர்பார்க்கவில்லை. பெரிய அலுவலர் வர்க்கம் நெருக்கமான இறுக்கமான - குழு. அதன் சிந்தனை எப்படிச் செல்லும்! தங்கள் சரணாலயங்களில் அன்னியர் நுழையும் வாய்ப்பு பெறாமல் தடுப்பதிலேயே செல்லும். அப்படிச் சென்றது, பகல் உணவுத் திட்டம் பற்றியும் 19. தில்லியின் ஒப்புதல் மாநில அரசுகள் பலதுறைத் திட்டங்களைத் தீட்டி முடித்த பிறகு, குறிப்பிட்ட நாள்களில், தில்லிக்குச் சென்று, மைய திட்டக்குழுவோடு, அய்ந்தாண்டுத் திட்டங்களைப் பற்றிப் பேசி, அக் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/182&oldid=787967" இலிருந்து மீள்விக்கப்பட்டது