பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நினைவு རྒྱl༩༠༠༠༩ཆམ།. ஒருங்கிணைந்த, நாடு தழுவிய, திட்டங்களை உருவாக்கும் போக்கில் தில்லி அலுவலர்களின் சிந்தனைகள் திணிக்கப்படுவதே இறுதி அறுவடை! 1955 ஆம் ஆண்டு இறுதியில், சென்னை மாநிலத் திட்டங்களை விளக்கி ஒப்புதல் பெற, தில்லிக்கு வரும்படி மையத்திட்டக் குழு அழைப்பு அனுப்பியது. திட்ட விவாதத்திற்கு மூன்று நாள்களைக் குறிப்பிட்டது. மையத் திட்டக் குழுவோடு பேசி, திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஒரு பெரும்படை சென்றது. முதலமைச்சர் காமராசர், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம், வேளாண்துறை அமைச்சர் மீ.பக்தவத்சலம் ஆகியோர் வந்தனர். அரசின் தலைமைச் செயலர் நீங்கலாக எல்லாச் செயலர்களும் வந்தார்கள். இயக்குநர்கள் அத்தனை பேரும் சென்றோம். சிலர், இணை இயக்குநர்களையும் உடன் அழைத்து வந்தனர். திட்டக் குழுவின் கூட்டத்திற்கு முந்திய நாள் முற்பகல் எல்லோரும் புதுதில்லி சென்றடைந்தோம். டி. டி. கே. அளித்த தேநீர் விருந்து அப்போது மாண்புமிகு டி. டி. கிருஷ்ணமாச்சாரி, இந்திய அரசின் வணிகத்துறை அமைச்சராக இருந்தார். அவர் சென்னையில் இருந்து வந்த அமைச்சர்கள், அலுவலர்கள், இயக்குநர்கள் ஆகிய அனைவரையும் மாலை தேநீர் விருந்திற்கு அழைத்தார். அதோடு சென்னை மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவ் விருந்திற்கு அழைத்திருந்தார். “சென்னை மாநில அரசு, சில திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வற்புறுத்தவும் சென்னையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு திட்டங்களை வற்புறுத்தவுமான நிலை ஏற்பட்டால், நம்முடைய ஆக்கம் குன்றிப் போகலாம். "இரு சாராரும் முன்கூட்டியே பேசி ஒரு முடிவுக்கு வந்தால், அது நமக்கு உதவியாக இருக்கும். அப்படிக் கூடிப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டே உங்களை அழைத்தேன்” என்று டி டி கிருஷ்ணமாச்சாரியார் முன்னுரை கூறியதும், சிற்றுண்டியும் தேநீரும் பரிமாறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/183&oldid=787968" இலிருந்து மீள்விக்கப்பட்டது