உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லியின் ஒப்புதல் - - 145 கூட்ட நிரல் உணர்வின்றி, மனம் விட்டுப் பேசினார்கள். பொறியியற் கல்லூரி தேவை அரசியல் கலக்காமல் உரையாடினர். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகிய சர். ஏ. இராமசாமி முதலியாரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்; அரிய ஆலோசனைகள் கூறினார். கல்வி அமைச்சர், கல்வித் துறையின் திட்டங்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறினார். அது எத்தகைய விவாதத்தையும் எழுப்பவில்லை. பகல் உணவுக்குக் கேடு வராது என்ற நம்பிக்கை என்னுள் மின்னிற்று. அவ் வேளை, டி. டி கிருஷ்ணமாச்சாரி ஒரு கேள்வியை எழுப்பினார். “வரும் அய்ந்தாண்டுத் திட்டத்தில் எத்தனை பொறியியல் கல்லூரி திறக்கப் போகிறீர்கள்?” என்பது கேள்வி. “ஒன்றுமில்லை” என்று கல்வி அமைச்சரே பதில் அளித்தார். அதைக் கேட்ட இந்திய அமைச்சர், என் பக்கம் திரும்பி, "நீங்கள் புதிதாக இயக்குநராகி இருக்கிறீர்கள். எனவே, மேலும் பொறியியற் கல்லூரி தேவையென்று உணராமைக்கு உங்களைக் குறை கூறமாட்டேன்” என்று விமர்சித்தார். மின்னலெனக் குறுக்கிட்டார், கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம். "இயக்குநர் புதிய பொறியியற் கல்லூரி ஒன்றாவது வேண்டும் என்று வாதாடினார். நான்தான், அதைத் திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டேன்” என்று அம்பலப்படுத்தினார் அமைச்சர். “உங்கள் சிந்தனை இதில் குறையானது” என்றார் கிருஷ்ணமாச்சாரி. *-i ஆர்க்காடு இராமசாமி முதலியார் குறுக்கிட்டு, கல்வி அமைச்சரிடம் ஒரு விளக்கம் கேட்டார். “ப்ொறியியற் கல்லூரி பற்றி, நீங்கள் வேறு எவருடைய ஆலோசனையின் பேரில் முடிவு எடுத்தீர்கள்?” என்று முதலியார் வினா எழுப்பினார். சி. சுப்பிரமணியம், “டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரின் ஆலோசனையைப் பெற்றேன்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/184&oldid=787969" இலிருந்து மீள்விக்கப்பட்டது