உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நினைவு அலைகள் என் தம்பிக்குத் தெரியாது இராமசாமி முதலியார் அதோடு ஒயவில்லை. "என் தம்பிக்குப் பல்கலைக் கழகப் படிப்பு பற்றித் தெரிந்த அளவு, தொழில் துறை தேவை பற்றித் தெரியாது” என்று மதிப்பிட்டார். டி. டி. கிருஷ்ணமாச்சாரி, அதற்கு விளக்கம் கூறினார். “எவ்வளவு வேறுவகையான பற்று இருந்த போதிலும், வேலைக்குச் சுறுசுறுப்பான ஆள் தேவைப்படும்போது, வட இந்தியத் தொழில் அதிபர்கள்கூட தென்இந்தியப் பொறியாளர்களையே விரும்பித் தேடுவார்கள். "ஏன்? நம்மவர்கள்தான் சுணங்காது உழைப்பவர்கள். ஆகவே, நம் பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்தியாவே பெரிய சந்தை ஆகும். "அப்படியிருக்க, சென்னையின் தேவையை மட்டும் நினைத்துக் கொண்டு இப்போதைய கல்லூரிகள் போதும் என்று முடிவு செய்துவிடாதீர்கள். “இந்தக் கடைசி நேரத்திலும் எதையாவது காட்டி ஒரு பொறியியற் கல்லூரியையாவது பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். சி. சுப்பிரமணியம் என்னைக் கேட்டார். “திட்டத்தில் விவரம் குறிப்பிடாமல், மொத்தமாக, ஒரு ஐம்பது லட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளோம். "அது புதிய பொறியியற் கல்லூரிக்கான ஒதுக்கீடு என்று சொல்லி, வாதிட முடியுமானால் செய்து பார்க்கலாம்” என்று சொன்னேன். எனது யோசனையை, டி. டி. கே அவர்களிடம் சி. சுப்பிரமணியம் சொன்னார். அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. i ய கல்வி பற்றிய அய்ந்தாண்டுத் திட்டத்தில் புதிய பொறியியற் கல்லூரி ஒன்றைச் சேர்த்துச் சொல்ல, ஒருமனதாக முடிவு செய்தோம். "புதிய பொறியியற் கல்லூரியைத் தனியார் நிர்வாகத்தில் விடுவதா, அரசே நடத்துவதா? எந்த ஊரில் நடத்துவது? போன்ற முடிவுகள் இன்னும் ஏற்படவில்லை. விரைவில் அவைபற்றி முடிவு எடுத்து, தகவல் கொடுப்பதாகச் சொல்லுங்கள்” என்று கல்விச் செயலருக்கும் எனக்கும் மிகத் தெளிவாக ஆணையிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/185&oldid=787970" இலிருந்து மீள்விக்கப்பட்டது