உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நினைவு.அலைகள் பக்தவத்சலம் விளக்கம் இவ் வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் மீ. பக்தவத்சலம் குறுக்கிட்டார். வழி ஒன்று காட்டினார். “இதுபற்றி, நேற்று மாலைதான், அமைச்சரவை முடிவு செய்தது. அந்தக் கூட்டக் குறிப்புகள் இன்னும் உறுதி செய்யப். படவில்லை. நாம் சென்னை திரும்பியபிறகு, அமைச்சரவையில் அதை மறு ஆய்வு செய்து, வேண்டியபடி மாற்று முடிவு எடுக்கலாம்” என்றார். கல்வி அமைச்சர் இசைந்தார். முதலமைச்சர் காமராசர். “சரி. சரி” என்றார். அகற்க மேல் ஒன்றும் சொல்லவில்லை. புகழ்மிக்க கிண்டி பொறியியற் கல்லூரி பற்றிய அமைச்சரவை முடிவுக்குப் பின்னணி என்ன? இரயில்வே இணை அமைச்சர் மாண்புமிகு அளகேசன் பங்களாவில் மீ. பக்தவத்சலமும் நானும் தங்கி இருந்தோம். எனவே, தேனிர் விருந்திற்குப்பின், அளகேசன் உட்பட, மூவரும் ஒரு காரில், அவருடைய பங்களாவிற்குச் சென்றோம். அப்படிச் செல்கையில், பக்தவத்சலனார், நடந்ததைச் சொன்னார். என்ன நடந்தது? “கிண்டி பொறியியற் கல்லூரியை மாநில அரசே வைத்துக் கொண்டு, மைய அரசின் திட்டத்திற்கான எல்லா உதவிகளையும் கொடுக்க வேண்டும் என்று பொதுக்கல்வி இயக்குநர் விரிவாக எழுதி இருந்தார். “பொறியியற் கல்லூரி, கல்வி அமைச்சரின் பொறுப்பில் இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தது அத் துறையின் அமைச்சர் சேதுபதி, இயக்குநர் பரிந்துரையை ஆதரித்தார். ஆனால், நிதி அமைச்சர் இந்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிலை எடுத்தார். “எனவே, மேற்கூறிய இரு அமைச்சர்களும் தொடர்புடைய அலுவலர்களுமாகக் கூடிப் பேசினார்கள். நிதி அமைச்சர், பழைய நிலையிலேயே நின்றார். இவ்விவகாரம் அமைச்சரவையின் முடிவுக்கு வந்தது. “சேதுபதி, கண்ணோட்டம் ஒன்று, சி. சுப்பிரமணியம் கண்ணோட்டம் வேறு. மற்ற அமைச்சர்கள் நிதி அமைச்சர் பக்கம் இருந்தோம். இறுதியில் முதலமைச்சர் காமராசர், “கிண்டி கல்லூரியைத் தொடர்ந்து நாமே நடத்துவதே நல்லது என்று எனக்குத் தோன்று கிறது. மற்றவர்கள் எல்லோரும் வேறு வகையாகக் கருதுகிறீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/187&oldid=787972" இலிருந்து மீள்விக்கப்பட்டது