பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவாயிரம் ஊர்களில் பகல் உணவுத் திட்டம் 249 'தினத் தந்தி’யின் எல்லாப் பதிப்புகளும்ே அதே கொள்கையை விழிப்போடு பின்பற்றுவதை நீங்கள் கவனித்து இருக்கலாம், அதற்குக் காரணம் 'பெரியவர் கட்டளை. “எங்கள் நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியருமான பெரியவரே, உங்கள் பேச்சை விழிப்போடும் மாசுமறு கலக்காமலும் எதுவும் விடுபடாமலும் அப்ப்டியே விரிவாக வெளியிட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார். “இச்சிறப்பு, ஆசிரியர் ஆதித்தனாருக்கே” என்று திரு. சின்னசாமி பதிலிறுத்தார். அதை என்னால் நம்ப முடியவில்லை. என்னைப் பற்றிய ஆதித்தனார் மதிப்பீடு காலையில் செய்த மலையளவு உதவியையும், மாலையில் அடியோடு மறந்து போகும் மறதி யுகத்தில், கடுகளவு உதவியும் என்னிடம் பெறாதவர், என்பால் அவ்வளவு பரிவு காட்டுகிறார் என்பது விந்தையாக இருந்தது. அதை வெளிப்படுத்தினேன். பதிலாக, திரு. சின்னாமி, ஆதித்தனாரின் கூற்றை வெளிப் படுத்தினார். “மாகாண அதிகாரிகள், உடம்பை அலட்டிக் கொள்ளாமல் மின்விசிறியின்கீழ் வேல்ை பார்க்கலாம். ஒரு பொழுதை விழாவிலும் , இன்னொரு பொழுதை அலுவலகத்திலும் செலவிடுதல், இவரையும் அவரையும் வட்டமிடுதல், தான் மேலும் மேலும் தாவுதல்: இதுதான் வெள்ளைக்காரன் நமக்குக் கற்றுக் கொடுத்துப் போனது. 'அம் மரபுப்படி நெ.து. சு. வசதியாகச் சென்னையில் இருந்து கொண்டே கோப்புகளை நகர்த் துவதோடு நின்றுவிட்டால் அவரை எவரும் குறை சொல்லப் போவது இல்லை. "அதோடு நெ. து. சு. முதலமைச்சர் காமராசருக்கும் வேண்டி யவர்: கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியத்துக்கும் வேண்டியவர். அவர்களது தயவால், மேலும் பெரிய வேலைக்கு முயன்றாலும் பலிக்கும். - “நெ. து. சு.வோ, உலகத்தையே மறந்துவிட்டு, காடுமேடு சுற்றி வந்து ஏழை எளியவர்களிடம் பேசி அவர்களோடு ஒருவராகவே ஆகிவிடுகிறார். --- “ஏழைகளின் படிப்பிற்கு வேண்டிய விழிப்பு முதல் சோறு வரைக்கும் கிடைக்கச் செய்கிறார். இவை எல்லாம் அவரது கடமை அல்லவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/288&oldid=788075" இலிருந்து மீள்விக்கப்பட்டது