பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவு அலைகள் “நாட்டு மக்களுக்கு உழைக்கும் நெ. து. சுவை சரியானபடி ஆதரிப்பது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. ஆகவே அவர் கூட்டங்களில் ஒன்றையும் விடாதீர்கள். சரியாக எழுதி வெளியிடுங்கள் என் று ஆசிரியரே கட்டளை இட்டுள்ளார். அதை அப்படியே நிறைவேற்றுகிறோம்” என்று திரு. சின்னசாமி தெரிவித்தார். அது முதல் சின்னசாமி எனக்கு உண்மையான நண்பராக விளங்குகிறார். ஒரு நெருக்கடியில், எனக்கு ஆதரவாக, அருமையான தலையங்கம் எழுதி என்னைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவினார். கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தினத் தந்தி கொடுத்த அளவு விளம்பரம் வேறு எவரும் கொடுக்கவில்லை ஆனால், எவரும் இருட்டடிப்பு செய்யவில்லை. மற்ற இதழ்களின் ஒத்துழைப்பு 'தினமலர்”, 'தமிழ்நாடு', 'தினமணி', 'விடுதலை’, ‘நவசக்தி' போன்ற இதழ்கள் அடுத்தடுத்துச் செய்திகளை வெளியிட்டதால், பல தரப்பாரும் இவற்றில் அக்கறை காட்டத் தலைப்பட்டார்கள். எனது இயக்குநர் பதவிக் காலத்தின் முதல் ஈராண்டு, பொதுமக்களுக்குக் கல்வியில் ஈடுபாடு வளர்ப்பதில் பயன்பட்டது எனலாம். அடுத்த பதினைந்து திங்கள், பொதுமக்கள் அன்னதானத்தை ஊக்குவிக்கப் பயன்ப்ட்டது. முதலில் பகல் உணவு திட்டத்தை மட்டுமே சொன்னேன் எனவே, பொதுமக்கள் மலைக்கவில்லை; ஒன்றே செய்க! நன்றே செய்க என்னும் முனைப்பில் வீட்டு வாசலில் பழக்கமான அன்னதானத்தைப் பள்ளிக்குள் திருப்ப முடிந்தது. ஆங்காங்கே, வரவேற்கத்தக்க போட்டி மனப்பான்மை தழைத்தது. பெருமழைக்குப்பின் இயற்கையாகவும், பரவலாகவும் முளைக்கும் இயற்கைச் செடி கொடிகள்போல், பற்பல ஊர்க்காரர்கள் இயற்கையாகவே பள்ளிப் பகல் உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/289&oldid=788076" இலிருந்து மீள்விக்கப்பட்டது