பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவாயிரம் ஊர்களில் பகல் உணவுத் திட்டம் 251 பகல் உணவுத் திட்டத்தின் சிறப்பு பள்ளிப் பகல் உணவு பிறந்த விதம், வளர்ந்த வகை, அதற்காக மக்கள் ஈந்த அமைதித் தியாகங்கள் ஆகியவை, சுவையான பெருங்கதை. புரட்சிப் பார்வையும் புதுமைக் கவித்திறனும் பேருள்ளமும், கொண்ட கவிஞருக்குச் சிறந்த காவியக் கருப்பொருள் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் ‘மணிமேகலை’க்கு வித்தாகும். அத்தனை நிகழ்ச்சிகளையும் சிலவற்றையாவது உங்கள் முன் கொண்டு வருதல் என் கடன் ஆகும். கோவில்பட்டி வட்டத்தில், காளாம்பட்டி என்றோர் ஊர் ய ள்ளது. அது 'கம்மவார் ஊர் என்பார்கள். அவ் வூரைச் சேர்ந்தவர்'என் நண்பர், பேராசிரியர் சீனிவாசன். பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்குவது பற்றி, ஒருநாள், பளர்ப் பெரியவர்கள் கூடினார்கள். எப்படி நடத்துவது என்பது பற்றிக் கலந்து உரையாடினார்கள். நிலமுடையோர் தானியம் தருவது; மிளகாய் பயிரிடுவோர் அதில் கொஞ்சம் தானம் கொடுப்பது; இப்படிச் சில முடிவுகள் ! டுக்கப்பட்டன. = * * பராமரிப்பது எப்படி? இதுபற்றியே சற்று நீளமான உரையாடல் நடந்தது. இருநூற்று இருபது நாள்களும் நேரா நேரத்தில் சமைத்து, ஒழுங்காகப் பரிமாற என்ன ஏற்பாடு.செய்வதென்பதைப் பற்றிப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வமயம், எட்டி நின்று கூட்ட நடவடிக்கைகளை பதட்டிகள் சிலர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் குறுக்கிட்டார். "ஏங்கய்யா! பெண்பிள்ளை குறுக்கிடுகிறேனென்று சினங் கொள்ளாதீர்கள். “உழைத்துப் பாடுபட்டுப் பொருள் கொண்டு வருவது, ஆண்கள் வேலை. அதைச் சமைத்துப் போட்டுக் காப்பது, வீட்டுப் பெண்கள் வேலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/290&oldid=788078" இலிருந்து மீள்விக்கப்பட்டது