உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 - - = நினைவு அலைகள் "அதேபோல, நம் ஊர்ப் பள்ளியில் உணவு போடுவது உங்கள் முடிவு போடுவதானால், அதற்குப் பொருள்களைச் சேகரிப்பது உங்கள் வேலை. "அதைக் கொண்டு சமைத்துப் போடும் வேலையை எங்களுக்கல்லவா விட்டுவிட வேண்டும்? உங்கள் முடிவை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் வழி செய்கிறோம்” என்றார் மூதாட்டி = --- - “நம் உறவினர், அக்கம் பக்கத்து ஊர்களிலே தொடங்கி விட்டார்கள். நாம் இனியும் தாமதிப்பது அவமானம். தொடங்குவதுதான் எங்கள் முடிவு. வேண்டிய பொருள்கள் சேரும் என்பது உறுதி. இனி நீங்கள் செய்யப் போவதைச் சொல்லுங்கள்' இப்படி ஆண்கள் சார்பில் பதில் வந்தது. "நாங்கள் எங்களுக்குள். பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். “சேர்ந்த பொருளையெல்லாம் ஒரு வீட்டுப் பொறுப்பில் பூட்டி வைப்போம். நாள்தோறும் காலையில் ஒருவர் அங்குச் சென்று அரிசி, பருப்பு முதலியவற்றை வாங்கி வந்து கொடுக்கட்டும். "நம் வீடுகளிலே, நாளைக்கு ஒருவர் வீட்டில் சமைக்கப் போவோம். பள்ளியில் பரிமாறிவிட்டு வருவோம். "சமைப்பதும் பரிமாறுவதும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பு. இது எவருக்கும் பளுவாகாது. மாதத்திற்கு ஒரு நாள் வரும். “முறை வீட்டாரே, சாப்பாடு முடியும்வரை கிட்ட இருந்து பார்த்துக் கொள்கிறோம்.” இப்படி ஒரு மூதாட்டி, மகளிர் சார்பில் எடுத்துரைத்தார். இத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நடைமுறைக்கு வந்தது: ஒழுங்காக நடந்தது. அரசின் திட்டமாகும்வரை செம்மையாக, வீடுகளில் சமைத்துக் கொண்டுவந்து பரிமாறினார்கள். சில மாவட்டங்கள், பள்ளிப் பகல் உணவுத் திட்டத்தில் முன்னோடிகளர்க முனைப்பாகச் செயல்பட்டன. சில தொடங்குவதற்கே அஞ்சின. சில கல்வி ஆய்வாளர்களும் அலுவலர்களும் இல்லாத தொல்லையைத் திணிப்பதாகக் குமுறினர். ஆனால், வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/291&oldid=788079" இலிருந்து மீள்விக்கப்பட்டது