உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமத்துவச் சங்கின் முழக்கம் கேட்டேன் 271 பகல் உணவுத் திட்டம் அரசின் திட்டமாவதற்கு முன்னர், சமயத் தலைவர்களிடமிருந்து கிடைத்த பேருதவியைப் பற்றிச் சொல்லாமல் விடுவது நன்றி மறந்த செயலாகும். பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் கிறித்தவ வேதத்தை எடுத்துப் படித்தவன். இன்றும் நினைவில் இருக்கும் அளவுக்கு அக்கறையோடு படித்தவன். அந்த ஞான விழுது எனக்குப் பெரிதும் உதவிற்று. கிறித்தவ வேதப்படி, "நியாயத் தீர்ப்பு நாள் ஒன்று வரும். அன்றுதான் எல்லா ஆன்மாக்களும் ஆண்டவர்முன் வந்து நிற்க வேண்டும். மனிதப் பிறவியிலே, அவர்கள் செய்த வினைப் பயன்களுக்கு ஏற்ப, ஆன்மாக்கள் சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பப்படுவார்களாம். அந்நாள் வந்தது. கணக்கில் அடங்காத உயிர்கள் காத்துக் கிடந்தன; கவலையோடும் ஏக்கத்தோடும் இருந்தன. ‘வாழ்ந்தபோது, நல்லது ஒன்றும் செய்யாது, வாழ்நாளை வீண் நாளாக்கிவிட்டோமே என்று கவலைப்பட்டவை கணக்கில் அடங்கா. அந்த நிலையில், ஆண்டவன், ஒருவர் பின் ஒருவராகச் சிலரைத் தம் முன்னால் அழைத்தார். அவர்களை “மோட்சத்திற்குப் போகக்கடவீர்” என்று கட்டளை இட்டார். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். ஆண்டவர், அவர்களுடைய மயக்கத்தைத் தெளிவுபடுத்தினார். “நீர், உயிரோடு வாழ்ந்தபோது, தாகவேட்கையோடு வந்த ஒருவருக்குத் தக்க சமயத்தில் குடிநீர் கொடுத்து உதவினர்; அந்த ஏழைக்குச் செய்த உதவி எனக்குச் செய்ததாகும்” என்றார். அடுத்த ஆன்மாவைப் பார்த்து, “நீர் உலகில் வாழ்ந்தபோது, ஒரு வேளை பசியால் அயர்ந்து வந்த வழிப்போக்கருக்கு உணவளித்து, உயிர் கொடுத்தீர். அவருக்குக் கொடுத்த உணவு எனக்குத் தந்த உணவு ஆகும்.” மூன்றாவது, ஆன்மா என்ன செய்ததாம்? விவிலியத்தின்படி பார்ப்போம். அந்த ஆன்மா, உயிரோடிருக்கையில், நலிந்தவன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, அந்த ஆன்மாவிடம் வந்தான். அவனுக் மருந்திட்டு, நோய் போக்கி அனுப்பி வைத்ததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/310&oldid=788100" இலிருந்து மீள்விக்கப்பட்டது