உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நினைவு அலைகள் அந்த நல்ல காரியங்களுக்காகத்தான், அவர்களை மோட்சத்திற்கு அனுப்பி வைப்பதாகக் கர்த்தர் கூறியபோது, ஆன்மாக்கள் தங்கள் தகுதியை உணர்ந்து கொண்டன. பகல் உணவுக் கூட்டங்களில் கிறித்தவ மறையில் உள்ள இப் பகுதிகளை எடுத்துக் காட்டுவேன். ஒவ்வோர் இசுலாமியரும் தமது சொத்திலும் வருவாயிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி வைத்து, அறச் செயல்களுக்குச் செலவிட வேண்டும் என்பது, நபிகள் நாயகத்தின் கட்டளை."அறிவு சீனாவில் இருந்தாலும் அதைத் தேடிக் கொண்டு வா’ என்பதும் நாயகத்தின் கட்டளை. பசித்தோர் முகம் பார்! உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! 'அற்றார் அழிபசி தீர்த்தல், அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி இத்தகைய கருத்துகளை மக்கள்முன் எடுத்துரைத்து ஆதரவு தேடினேன். 'மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்ட பொதுமக்கள் மனம் மாறி, உதவ முன் வந்தார்கள் முதலமைச்சர் காமராசரிடம் கிறித்தவக் குருமார்கள் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவரது அரசியலைப் பின்பற்றாதவர்களும், அவரிடம் பேரன்பு காட்டினதை நான் பார்த்திருக்கிறேன். முதல் அமைச்சர், மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பகல் உணவுத் திட்டத்திற்குப் பிச்சை கேட்க வருகிறேன்’ என்ற அறிவிப்பு. பொதுமக்களின் நெஞ்சங்களை நெகிழ்வித்தது போன்றே, இரு பிரிவு கிறித்தவத் தலைவர்களின் உள்ளங்களை உருக்கிற்று. திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் எண்ணற்றவை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையாலோ, பிராடெஸ்டெண்ட் திருச்சபையாலோ நடத்தப்படுவன. து.ாத்துக்குடியைத் தலைநகராகக் கொண்ட ரோமன் கத்தோலிக்க மேற்றிராணியாரும் (ஆர்ச் பிஷப்பும்) திருநெல் வேலியைத் தலைமை இடமாகக் கொண்ட அப் பகுதி பிஷப்பும் தங்கள் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/311&oldid=788101" இலிருந்து மீள்விக்கப்பட்டது