பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நினைவு அலைகள் அக் காலத்தில் ஒரே ஒர் இயக்குநர் என் குடும்பமே ஊதியம் பெறாத - நடைமுறைகளில் தலையிடாத - அலுவல்களில் தலையிடாத - கல்வித் தொண்டில் ஈடுபட்டது. கல்வி இயக்ககத்தில் சிற்றாள், சிறுவன் திருவள்ளுவன். அவன் ஒர் இயக்கமாகிச் செயல்பட்டான். திருவள்ளுவன் அய்ந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம். அவன் படித்த பள்ளி, பெண்கள் பள்ளி. அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை ஆண், பெண் குழந்தைகள் சேர்ந்து படிக்க அனுமதித்து வந்தார்கள். ஆறாம் வகுப்பிலும் வள்ளுவனுக்கு அனுமதி ஆறாம் வகுப்பில் இருந்து, பையன்கள் வேறு பள்ளியில்தான் படிக்க வேண்டும். எனவே, எந்தப் பள்ளிக்கு அவனை அனுப்புவது என்ற பேச்சு எழுந்தது. அதைக் கேட்டு கொண்டிருந்த திருவள்ளுவன், 'அம்மா! அப்பாவின் கீழ் இருக்கும் பள்ளிக்கு அனுப்பாதீர்கள். நான் இப்போதுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் மதிப்பெண் வாங்குவதுபோல, புதுப்பள்ளியில் வாங்கினால், அது இயக்குநர் மகன் என்பதற்காகப் போட்ட மதிப்பு எண்’ என்று சொல்லுவார்கள். அந்தப் பழி வேண்டாம். டாக்டர் இலட்சுமண சுவாமி முதலியார் மேற்பார்வையில் நடக்கும் பள்ளியில் சேர்த்து விடுங்கள்” என்றான். இப்போது, கீழ் வகுப்புகளில் சேர்ப்பதற்குக்கூட வைரத்தின் விலைகொடுக்க வேண்டி இருப்பதாகக் கேள்வி. அப்போது அப்படியில்லை. மறைத் தவத்திரு தமக்கை செலினே திருவள்ளுவனுககு டான்பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் இடம் பெற்றுவிட்டார்கள். பிறகு, என்ன தோன்றிற்றோ! திருவள்ளுவனை அவன் படித்த பெண்கள் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பில் வைத்திருக்க, தக்கவர்களிடம் இசைவு பெற்றுவிட்டார்கள். ஞானப் பிஞ்சு அந்த ஞானப் பிஞ்சு, குனக் குன்றாகவும் விளங்கினான். அவன் உள்ளம் இளகியது. பிறர் பசித்திருக்க - வாட்டமுறப் - பொறுக்க மாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/339&oldid=788131" இலிருந்து மீள்விக்கப்பட்டது