பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியாகத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு 405 எனவே, பல்கலைக் கழகத்தில் பேரவைக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. சுப்ரமணியம் மறுநாள் காலை, வந்து துக்கம் விசாரித்துவிட்டுச் சென்றார். நான் மாமனார் வீட்டில் இருந்ததைக் கண்டார். முதலமைச்சர் வந்து ஆறுதல் கூறினார். பெரியார் வந்தார்; ஆறுதல் கூறித் தேற்றினார். நிழல் போராட்டம் ஒரு நாள் பொறுத்து, கல்வி அமைச்சரின் இல்லம் சென்றேன். வேலூர் மாநாடு பற்றித் தகவல் கொடுத்தேன். அது முடிந்ததும், அமைச்சர் இரு தமிழ் நாளிதழ்களை என்னிடம் கொடுத்துப் படிக்கும்படி கூறினார்; படித்தேன் திகைத்தேன்; எதனால்? - கொட்டை எழுத்துகளில் எனக்கு விளம்பரம்; எப்படி? திருச்சி மாவட்ட வளர்ச்சிக் குழுவின் கூட்டம் 31-7-1960 அன்று கூடிற்று. அதில், 'பெரிய கல்வி அதிகாரி கலந்து கொண்டார். பல துறைகளின் அடுத்த காலாண்டுத் திட்டக் குறியீடுகள் பரிசீலிக்கப் பட்டன. “கல்வித்துறையைப் பொறுத்த மட்டில், ஆண்டுக்கொரு முறைதான் புதிதாகப் பள்ளியில் சேர்ப்பதால், ஆண்டு முழுவதற்குமான குறியீட்டையடைந்து விட்டோம்” என்று பெரிய கல்வி அதிகாரி கூறினார். “மேலும் பேசுகையில், சென்னை மாநிலம் முழுவதிலும் இவ் வாண்டில் இத்தனை ஆயிரம் (புள்ளி விவரம் சரியாகவே கொடுக்கப்பட்டிருந்தது) ஊர்களில் கட்டாயக் கல்வி, நடைமுறைக்கு வருகிறது. "அத்தனை ஊர்களிலுமாகச் சேர்ந்து, இவ்வளவு இலட்சம் சிறுவர் சிறுமியர் சேரவேண்டுமென்பது, அரசின் திட்டம். அது முழுமையாக நிறைவேறிவிட்டது” என்று பெரிய கல்வி அதிகாரி அறிவித்தார். - மேற்கூறியபடி செய்தி வெளிவந்தது. அந் நாளிதழ் பொதுக் கல்வி இயக்குநரை அப் பெயரால் அழைப்பதில்லை. பெரிய கல்வி அதிகாரி, என்றே அழைக்கும். ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/444&oldid=788247" இலிருந்து மீள்விக்கப்பட்டது