பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 நினைவு அலைகள் மற்றோர் நாளிதழ் அந்தச் செய்தியை வெளியிட்டு, பொதுக் கல்வி இயக்குநர் அறிவித்ததாகவே கூறிற்று. செய்தித்தாள் உலகத்தின் நெறி என்னே! நான் செய்திகளைப் படித்து முடித்ததும் கல்வி அமைச்சர், "நேற்று திருச்சியில் இல்லாத உங்களை அங்கு முக்கியமான கூட்டத்தில் பேசியது போல், செய்தி கொடுத்தது விபரீதம். “அதைவிட விபரீதம் என்ன தெரியுமா? கால் மணிக்கு முன்பு தான், சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் ஒருவராகிய திரு . என்னிடம் வந்து சண்டை போட்டார். (அமைச்சர் வந்தவர் பெயரை வெளியிட்டார். நான் வெளியிட விரும்பவில்லை.) “மாநிலம் முழுவதும் சில ஆயிரம் ஊர்களில் கட்டாயக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். கூடுதல் சேர்க்கைக் குறியீடு மிகப் பெரிது. அதை எட்டிப் பிடித்துவிட்டீர்கள். - “இவ்வளவு பெரிய செய்தியை அமைச்சர் அறிவித்து புகழ் தேடிக் கொள்ளாமல், இயக்குநர் அப் புகழைத் தட்டிக் கொள்ள விட்டுவிடலாமா” என்று அவர் சினந்து கொண்டார். "அவர் பேசி முடித்ததும் நான் கோபப்படாமல், நேற்று மறைந்த உங்கள் மாமனார் பக்கத்தில் நீங்கள் இருந்த நிலையைச் சொன்னேன். அவர் நம்ப மறுத்தார். ‘விடுதலை’ நாள் இதழில் வெளியான அச் செய்தியைக் காட்டிய பிறகே நம்பிக்கை வந்தது. “தமிழ்நாட்டில் இப்போது வளர்த்துள்ள, எழுச்சியில், ஆர்வத்தில் இலட்சக்கணக்கான கூடுதல் சேர்க்கை, வெகு சாதாரணம் என்று சொல்லி அமைதிப்படுத்தினேன்” என்றார். 'இல்லாது பிறக்குமா? இச் செய்தி பொய்யா? புள்ளி விவரங்கள் மெய். நெ. து. சு. அறிவித்ததாகப் பொருள்படும்படி வெளியிட்டது 'திரிபு. நடந்து என்ன? ஒவ்வோர் ஆண்டும் மே திங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த ஊர்களில் கட்டாயக் கல்வி முறை செயல்படத் தொடங்கும், எவ்வளவு பேர்களைக் கூடுதலாகச் சேர்க்கவேண்டும் என்ற சுற்றறிக்கை எல்லா மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் செல்லும், சூன் இறுதிக்குப்பின், எவ்வளவு சேர்க்க முடிந்தது என்ற விவரமான அறிக்கையை அவர்கள், பொதுக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்புவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/445&oldid=788248" இலிருந்து மீள்விக்கப்பட்டது