உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 நினைவு அலைகள் கணக்கு வழக்குகளைப் பொதுமுறைப்படி சரியாக வைத்திருக்கிறார்களா? என்று பார்த்துக்கொள்வது மட்டுமே அரசின் பொறுப்பு. உரிமை உடைய அமைப்புகள் என்பதால் பல்கலைக்கழகங்கள் தான்தோன்றித்தனமாக, விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் செயல் படுவதில்லை. நடமாடும் நூலகம் எடின்பரோ நகரத்துக்கு அப்பால் மலைப் பகுதியில் ஒரு சிற்றுாருக்கு அழைத்துப் போனார்கள். அங்கே நடமாடும் நூலகம் ஒன்றைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அந் நூலகம் குறிப்பிட்ட பொது இடத்திற்கு அறிவித்த நேரத்தில் வந்து சேர்ந்தது. நொடியும் வீணாக்காது சாளரங்கள் திறக்கப்பட்டன. ஒரு பக்கம் கடன் வாங்கிய நூல்களைத் திருப்பிக் கொடுத்தார்கள். மறுபக்கம் நூல்களை வாங்கிக் கொண்டார்கள். --- கொடுக்கல் வாங்கல் ஆகிய இரு வேலைகளும் இருபது மணித்துளிகளில் முடிந்தன. நடமாடும் நூலகம் அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றது. பிரிட்டானியக் கல்விமுறை அரசினுடைய பொறுப்பு, கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வது மட்டுமல்ல; பள்ளி இறுதிக்குப்பின் தொடர் கல்வி பெற வழி வகை செய்வதும் ஆகும். அதோடு பொது நூலக வசதிகளைப் போதிய அளவு பெருக்குவதும் அரசின் கடமைகளில் ஒன்றாகும். இந்த அடிப்படையில் பிரிட்டானியக் கல்வி ஏற்பாடுகள் உள்ளன. அங்குப் பாலர் பள்ளிகள் எப்படி நடைபெறுகின்றன? குழந்தைக்கு 3 வயது முடிந்ததும், பாலர் பள்ளியில் சேர்க் கிறார்கள்; 5 வயது முடிந்ததும், தொடக்கப் பள்ளியில் சேரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/547&oldid=788360" இலிருந்து மீள்விக்கப்பட்டது