பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி - 1965 545 பொதுமக்களோடு எளிமையாகப் பழகி வந்தவர். எனவே, பொதுமக்கள் உணர்வுகளை அவர் சட்டென்று உணர முடிந்தது. இந்தி எதிர்ப்புக்கு நாள் அறிவித்தபிறகு, நான் அலுவல் பற்றி மதுரைக்குச் செல்ல நேர்ந்தது. திருநகரில் திரு. ராமாச்சாரி என்னும் தொழில் அதிபர் தொடங்கிய பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன். அவ் விழாவிற்குத் திரு.என்.எம்.ஆர். சுப்பராமன் வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர் என்னோடு தனிமையில் அரைமணி நேரம் பேசினார். இறுதியில் வேண்டுகோள் ஒன்றும் விடுத்தார். "நீங்கள் கல்வி இயக்குநர் என்ற முறையில் முதலமைச்சருக்கு உதவியாக இருக்க வேண்டியவர்கள். “சில வேளைகளில் பெரியவர்களிடம் அவர்களுக்கு எட்டாத சில கசப்பான தகவல்களைத் தெரிவிப்பதில்தான் நம்முடைய உதவி பெரிதாக இருக்கும். “முதலமைச்சருக்கு அப்படிப்பட்ட செய்தி ஒன்றை நீங்கள் நேரில் தெரிவிக்கவேண்டும். “நம் முதலமைச்சர் பக்தவத்சலம் எவ்வளவு பெரிய சிக்கலானாலும் எளிதாகத் தீர்க்கக்கூடியவர். "அப்படிப்பட்டவர் இப்போது இந்தி எதிர்ப்பாளர்களின் உணர்வையும், தொடர்புகளையும், செல்வாக்கையும் குறைத்து மதிப்பிடுகிறார். “அந்த மதிப்பீடு சரியல்ல. “எப்படியோ எதிர்ப்பு உணர்வு பரவலாகி உள்ளது. “பல மட்டங்களிலும் பரவியுள்ளது. “இதை முதலமைச்சர் புரிந்து கொண்டால் அப்புறம் அதை எளிதில் சமாளித்துவிடுவார். “எனவே, நீங்கள் சென்னை திரும்பியதும் முதலமைச்சரைக் காணுங்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் கடுமையாக இருக்கும் என்று பலரும் அஞ்சுவதாகச் சொல்லுங்கள்.” அவர் பேசி முடிப்பதற்கு முன் நான் குறுக்கிட்டேன். "ஐயா! இம்மாதிரித் தகவல்களை ஒர் அலுவலர் கொண்டு போவதைவிட, தங்களைப் போன்ற தேசபக்தி தியாகி ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/584&oldid=788401" இலிருந்து மீள்விக்கப்பட்டது