உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 நினைவு அலைகள் கொண்டு செல்வது அதிகப் பயனை விளைவிக்கலாம்” என்று பதில் உரைத்தேன். திரு. சுப்பராமன், “நானே இதற்காகவே சென்னைக்கு சென்றேன். முதலமைச்சரைக் கண்டேன். அதை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன். “அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டார். ஆனால் இறுதியில் நீங்களும்தான் இந்தி எதிர்ப்பில் சேர்ந்து கொள்ளுங்களேன்’ என்று கோபமாகப் பதில் உரைத்தார். “இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சிக்கோ, அம் முதலமைச்சருக்கோ, தீங்கு வரக்கூடாது என்பதற்காக உங்களைத் துது அனுப்புகிறேன். “தயவுசெய்து செய்தியை விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். தூது சென்றேன் நானும், மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களிடம் கொண்டி ருந்த பற்று காரணமாகத் துது செல்ல ஒப்புக் கொண்டேன். அவ் வாக்குறுதியைச் சென்னைக்குத் திரும்பியதும் நிறை வேற்றினேன். முதலமைச்சரை அவரது இல்லத்தில் கண்டு பேசினேன். ஏற்கெனவே ஆசிரியர்களில் பலர் இந்தி எதிர்ப்பு இயக்கம் பேருருவம் எடுக்குமென்றும், அதை முதலமைச்சரின் காதில் போடும்படியும் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் சார்புடையவர்கள். பலரிடம் இருந்து நான் கேட்டதைப் பீடிகையாக முதலமைச்சரிடம் கூறினேன். பின்னர், சுப்பராமன் அவர்களின் வேண்டுகோளை அவர் முன் வைத்தேன். தோன்றப் போவது சிறு சிரங்கு அல்ல; பெரும் புற்றுநோய் என்று தங்கள் மனத்தில் பட்டுவிட்டால் போதும். அப்புறம் அதைக் குணப்படுத்திவிடுவீர்கள்’ என்று பலரும் என்னிடம் கூறியதை முதலமைச்சர் முன் வைத்தேன். அவர் என் மேல் வெகுளவில்லை; பொறுமையாகக் கேட்டார். ஆனால் பதில் கூறாமல் இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/585&oldid=788402" இலிருந்து மீள்விக்கப்பட்டது