பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54B நினைவு அலைகள் காவல்துறை பொறுமை காட்டட்டும் காவல்துறையின் தலைமை அலுவலர் உடனே வந்தார். முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசினார். 'நேற்று மதுரையில் நடந்த அசம்பாவிதம் தவிர, வேறு எங்கும அசம்பாவிதம் இல்லை. காவல்துறை நேற்றுபோல் இன்றும் ஆத்திரம் ஊட்டும் நிலையிலும் ஆத்திரப்படாது இருந்துவிட்டால், நாளை முதல் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். "நீங்கள் கம்பியில்லாத தந்தி மூலம் எல்லா மாவட்டங்களையும் உஷார்ப்படுத்திப் பொறுமை காக்கச் சொல்லுங்கள்” என்று காவல்துறைக்கு ஆணையிட்டார் கல்லூரிகளுக்கு மிரட்டல் பின்னர், முதலமைச்சர் என்னைப் பார்த்து, ‘நேற்று வண்ணாரப்பேட்டை தியாகராயர் கல்லூரியின் மாணவர்களும் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்களும் வேலை நிறுத்தம் செய்து கிளர்ச்சியில் சேர்ந்து இருக்கிறார்கள். “அதற்காக அக் கல்லூரிகளுக்குக் கொடுக்கும் அரசின் நிதி உதவியை ஏன் நிறுத்தக்கூடாது என்று கேட்டு முன் அறிவிப்பு கொடுங்கள்; அது இன்றே செல்லட்டும். “அச் செய்தியைப் பத்திரிகைகளுக்குத் தெரிவித்து விடுங்கள்” என்று முதலமைச்சர் ஆணையிட்டார். தலைமைச் செயலர் திரு. டி. ஏ. வர்கீஸ் அப்போது குறுக்கிட்டார். “இரண்டு கல்லூரிகள் மட்டுமல்ல; அநேகமாக எல்லாக் கல்லூரிகளும் நேற்று மூடப்பட்டன. "நடவடிக்கை எடுப்பது என்றால் எல்லாக் கல்லூரிகள் பேரிலும் எடுக்க வேண்டும். "இரண்டொரு நாள் பொறுத்து இருந்து அப்புறம் நடவடிக்கை அறிவிப்பு அனுப்பலாம்” என்று அவர் கூறினார். நான் அதை ஆதரித்தேன். முதலமைச்சர் ஏற்கவில்லை. "மேற்படி இரண்டு கல்லூரிகளுக்கு மட்டும் இன்றே அறிவிப்பு போய்விட வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/587&oldid=788404" இலிருந்து மீள்விக்கப்பட்டது