உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி-1965 549 “நான் நேரே அலுவலகம் சென்று தாங்கள் கட்டளை யிட்டபடி அறிவிப்பு நகலை ஆயத்தம் பண்ணி விடுகிறேன். "அதைத் தாங்களாவது, தலைமைச் செயலராவது பார்த்துத் திருத்தி ஒப்புதல் கொடுத்தால் இன்றே அனுப்பிவிடுவேன்” என்று கூறினேன். முதலமைச்சர் சிறு திருத்தத்தோடு அதை ஏற்றுக் கொண்டார். 'இயக்குநர் ஆயத்தம் பண்ணும் அறிவிப்பு நகலை கல்விச் செயலரும், தலைமைச் செயலரும் இன்றே பார்த்து திருத்தி ஒப்புதல் கொடுங்கள். "அப்படித் திருத்தியதை இயக்குநர் கல்லூரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வார்” என்று முதலமைச்சர் ஆணையிட்டார். இதற்கிடையில் நான் குடியரசு தினவிழாவிற்குப் புறப்படுகையில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவர் என்னைக் கண்டார். "ஐயா, சென்னைக் கல்லூரி மாணவர்கள் பலர் இன்று காலை 10 மணிபோல் தங்களைத் தேடி வருவார்கள். இந்தி எதிர்ப்புப் பற்றி தங்களிடம் பேசுவார்கள். "தங்களை இவ் விவகாரத்தில் சிக்க வைக்க முயல்கிறார்கள். தயவுசெய்து அவர்களிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று எச்சரித்து விட்டுப் போனார். இந் நிகழ்ச்சியை எல்லோர் முன்னிலையிலும் முதலமைச்சரிடம் கூறினேன். "அப்படி மாணவர்கள் வந்தால் நான் என்ன பதில் கூறினால் அரசுக்கு உதவியாக இருக்கும்; வழிகாட்டுங்கள்” என்று முதலமைச்சரை வேண்டிக் கொண்டேன். “முதலமைச்சரைத் தவிர வேறு அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிப்பது இல்லை என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று மாண்புமிகு வெங்கட்ராமன் அறிவித்தார். ஆலோசனை அதோடு முடிந்து எல்லோரும் விடைபெற்றுக் கொண்டோம். தாமதப்படுத்துக முதலமைச்சர் கட்டளைப்படி 'அரசின் நிதி உதவியை ஏன் நிறுத்தக்கூடாது?’ என்று விளக்கம் கோரும் வகையில் அறிவிப்பை எழுதி, தட்டச்சு செய்து கல்விச் செயலருக்கு அனுப்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/588&oldid=788405" இலிருந்து மீள்விக்கப்பட்டது