பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 நினைவு அலைகள் முன்னாள் ஆணையர் என்கிற முறையில் அந்த மனை மலிவாக வருவதாக மதிப்பிட்டுக் கூறினார். அதோடு அப்படிப்பட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நூலகம் அமைந்தால், அது முழுப் பயன் தரும் என்பதை உணர்ந்ததால் நாங்கள் இருவரும் அம் மனையை வாங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தோம். இத்தகைய நிலமொன்றை வாங்குவது அதுவே முதல் தடவை. எனவே, கல்வி அமைச்சரைக் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லதென்று இருவரும் கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. சுப்பிரமணியம் அவர்களைக் கண்டோம். - அவரோடு கலந்தாலோசித்தோம். அவரும் அம் மனையை நூலகக் குழு வாங்குவதற்கு ஒப்புக் கொண்டார். மாவட்ட நூலக ஆணைக் குழுவுக்குச் சொத்து வாங்க உரிமையுண்டு. இருப்பினும் அரசின் எழுத்து வாயிலாக ஒப்புதலைப் பெறுதல் நல்லதென்று திரு. வி. என். சுப்பராயன் கருதினார். அந்த ஆணை வரும்வரை காத்திருந்தால் மனையை வேறு எவராவது தட்டிக்கொண்டு போய்விடக்கூடும் என்று அஞ்சினோம். - எனவே, நூலக ஆணைக் குழுத் தலைவர் அம் மனையை உடனடியாக வாங்கிக்கொள்ள வேண்டுமென்றும், பொது நூலக இயக்குநராகிய நான் அதற்கு இசைவு தருவதோடு, அதை அரசுக்குத் தெரிவிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திரு. வி. என். சுப்பராயன் அம் மனையைத் திரு. அனந்தராமகிருஷ்ணன் உதவியோடு வாங்கி முடித்தார். பொதுநூலக இயக்குநராகிய நான், அது பற்றித் திரு. வி. என். சுப்பராயனிடம் ஒரு கடிதம் பெற்று, முன்னர் நடந்த ஆலோசனையை விவரமாகச் சொல்லி அரசுச் செயலருக்குக் கடிதம் எழுதினேன். அந்த மனை வாங்கிய நடவடிக்கையை அரசு குற்றம் சொல்ல முடியாது." o இருப்பினும் பெரும்பதவி வகிப்போர் தயவிற்குக் காத்திருக்கவில்லையே என்ற கோபமூண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/685&oldid=788512" இலிருந்து மீள்விக்கப்பட்டது