பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zufigaiš#9:n Gurrë shiraus. Quảaith 667 ‘பொது நூலக இயக்குநர் மேற்படி மனையை வாங்குவதற்கு இசைவு கொடுத்திருக்கக்கூடாது' என்று அரசு ஆணை என்னைக் குத்திற்று. பொது நலனைக் கருதுபவன் அதற்காக இத்தகைய குத்துகளை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன். சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அதற்கு முன்னரே சிலம்புச் செல்வர் திரு. ம.பொ. சி. சென்னை நூலக ஆனைக் குழுவின் தலைவராக விளங்கினார். அக் கால கட்டத்தில் சென்னை மாநகராட்சி, ஏற்கெனவே நடத்தி வந்த நூற்றுக்கு மேற்பட்ட சிறு நூலகங்களை, நூலக இயக்கத்தின் கீழ்க் கொண்டு வரத் திரு. ம.பொ. சி. அவர்கள் ஏற்பாடு செய்தார். அதன் மூலம் சென்னை மாநகரில் நூலக இயக்கம் வளர்ந்தது. நூலக இயக்க வளர்ச்சி நூலகம் தேடி வந்து படிக்காதவர்கள் எண்ணற்றவர்கள் --- இருந்தார்கள். அவர்களைத் தேடி நூலகம் செல்ல வேண்டும் என்று எண்ணினேன். நடமாடும் நூலகம் இயங்குவதற்கு வேண்டிய வசதிகளோடு வாகனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது முறை போட்டுக் கொண்டு சென்னை மாநகரில் பல பகுதிகளுக்கும் சென்று வீடுகளில் நூல்களை வழங்கியது. பின்னர் இரண்டாவது நடமாடும் நூலகமும் நடக்க ஏற்பாடு செய்தேன். இதன் மூலம் மைய நூலகத்திலுள்ள நூல்கள் பொது மக்களுக்குக் கிடைப்பதோடு, கல்வி மையங்களுக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டது. மதுரை, கோவை மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் செயல்பட்டன. நூலக இயக்கமும் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகள் போல விளம்பரத்தைப் பெற்றது. நூலக விழாக்களுக்கு மக்கள் திரளாகக் கூடினர். பொதுக் கல்வித் துறை அலுவலர்கள், கல்வியோடு நூலகங்களையும் வளர்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/686&oldid=788513" இலிருந்து மீள்விக்கப்பட்டது