உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 நினைவு அலைகள் இரண்டையும் இரு கண்களாகக் கருதினர். எனவே, நூலக வளர்ச்சியில் ஆசிரியர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் பெருகி வந்தது. குடியரசுத் தலைவரின் பேச்சை மொழிபெயர்த்தேன் செங்கற்பட்டு மாவட்டத்தில் திரு.டி புருஷோத்தம முதலியார் தொடர்ந்து பல்லாண்டு காலம் நூலக ஆணைக் குழுவின் தலைவராக அரும்பணி ஆற்றினார். அவர் செங்கற்பட்டு நகரில் மைய நூலகக் கட்டடத்தைக் கட்டி முடித்தார். குடியரசுத் தலைவர் - தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணனைக் கொண்டு அக் கட்டடத்தைத் திறக்க வைத்தார். #. அப் பெருவிழாவில் பொது நூலக இயக்குநராகிய நானும் கலந்துகொண்டு உரை ஆற்றும் பேறு பெற்றேன். * அதோடு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருடைய பேருரையைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பினையும் பெற்றேன். அவரது ஆங்கில உரைக்குக் கிடைத்த கையொலிகளுக்கு இணையாகவே எனது தமிழாக்கத்திற்கும் கையொலி கிடைத்தது. ஆசிரியர்களின் தியாகம் o டாக்டர் ராதாகிருஷ்னன் எனது மொழியாக்கத் திறனைப் பாராட்டினார். செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளுர் நகரில், திரு. சி. வி. நாயுடு அவர்கள் தலைமையில், அவ்வூர் கிளை நூலக விழா நடந்தது. திரு. புருஷோத்தம முதலியாரோடு நானும் கலந்து கொண்டேன். விழா தொடங்குவதற்குமுன் ஒருவர் என் காதில் தனியாக ஒரு செய்தியைப் போட்டு வைத்தார். "ஐயா! நம் சமுதாயத்தில் படித்த பெண்கள் சிலரே. அவர்களுக்கும் துணிந்து நூலகத்திற்குச் சென்று நூல் எடுத்து வரும் பழக்கம் இன்னும் உருவாகவில்லை. அது உருவாக எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ! அதுவரை வீடு தேடி நூல்களைப் பெண்களுக்குக் கொடுத்துவர ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்' - இது நான் கேட்ட செய்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/687&oldid=788514" இலிருந்து மீள்விக்கப்பட்டது