பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்மதிப்பீட்டு حتلالات كلا சீர்கேடுகள் 585 இவ் வுடன்படிக்கை மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. மாணவர்களின் தலைவர்களோடு இரு கல்லூரி முதல்வர்கள் சென்று திரு. ஜி. ஆர். டியிடம் புகைவண்டி நிலையத்தில் நடந்தவற்றைக் கூறவும் ஏற்பாடு செய்தேன். “நெ. து. சு.வாழ்க’ என்று மாணவர்கள் வாழ்த்த பொள்ளாச்சிக்குச் சென்றேன். நண்பர் மகாலிங்கம் முன்னிருந்து நடத்தும் நிகழ்ச்சி சிறப்பாகவும், கச்சிதமாகவும் நடந்தது என்று கூறவா வேண்டும்! கோவை விமான நிலையத்தில் இதற்கிடையில் திரு. ஜி. ஆர். டி. திரு. மகாலிங்கத்தோடு தொலைபேசித் தொடர்புக்கொண்டு, துணைவேந்தரைக் கோவை விமான நிலையத்தில் காண்பதாகத் தகவல் கொடுத்தார். எனவே பொள்ளாச்சியிலிருந்து நேரா நேரத்தில் அனுப்பி வைக்கப் பட்டேன். கோவை விமான நிலையத்தில் மாணவர்களின் தலைவர்களும், நூறு மாணவர்களும் காத்திருந்தார்கள். நான் காரை விட்டு இறங்கியதும், “பாடத்திட்டக் குழுத் தலைவர், வி. ஐ. பி.” பெரியவர்கள் அறையில் தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று கூறியபடியே என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள். மாணவர்களின் தலைவர்கள் காலையில் என்னிடம் கூறியதை திரு. ஜி. ஆர். டி முன் மீண்டும் கூற வைத்தேன். பெருந்தன்மையோடு என்னைக் கான விமான நிலையம் வந்த அவர், இளைஞர்கள் சொல்வதைப் பொறுமையாகப் புன்முறுவலோடு கேட்டார். அடுத்து, 'நானும் அன்பர் ஆர். ம் தனித்துப் பேச : #o ಓ....; G, “பேசுங்கள்” என்று சொல்லித் தலைவர்கள் வெளியேறினார்கள். “இப்போது உங்கள் கருத்தை எனக்குத் தெரிவிக்கலாமே” என்றேன். "உள் மதிப்பீட்டு முறை எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. அதை எப்படிச் சீர்செய்வது என்று ஆர அமரச் சிந்திக்க வேண்டும். நான் இரண்டொரு நாள்களில் சென்னைக்கு வருகிறேன்: அப்போது தங்களைப் பார்க்கிறேன். அதற்கிடையில் தாங்கள் கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் திரு. ஹெக்டேயைக் கலந்து ஆலோசியுங்கள்” என்று வழிகாட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/704&oldid=788533" இலிருந்து மீள்விக்கப்பட்டது