பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'5Bß நினைவு அலைகள் நோய் இருக்கிறது அடுத்து அவருடைய ஆலோசனைப்படியே மாணவர்களின் தலைவர்களை அழைத்து, “நோயிருக்கிறது என்று பாடத்திட்டக் குழுத்தலைவரும் கருதுகிறார். என்ன மருத்துவம் செய்வது என்பதை மேலும் சிலரைக் கலந்து முடிவு செய்கிறோம். அதற்கு இடையில் உங்கள் படிப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கல்லூரிகளுக்குச் செல்லுங்கள்” என்று முடிவு கூறினேன். மாணவர்களிடம் நம்பிக்கை பிறந்தது. நன்றியோடும் மகிழ்ச்சியோடும் வழிஅனுப்பி வைத்தார்கள். உள் ரகசியம் சென்னைக்குத் திரும்பியதும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஹெக்டேவுக்குச் சொல்லி அனுப்பினேன். அவர் வந்து என்னைப் பேட்டி கண்டார். பொறி இயல் தேர்வுகளில் உள்மதிப்பீடு பற்றிய சிக்கலைப் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு இரகசியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். அது என்ன? --- "ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தனிப்பிரிவு ஒன்றில் சேர்ந்துள்ள முப்பது மாணவர்களும் உள்மதிப்பீட்டில் மூன்றாம் முறையாகத் தவறியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் புற மதிப்பீட்டில் எல்லாத் தேர்வுகளிலும் சிறப்பு மதிப்பு எண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சிறு பகுதியான உள் மதிப்பீடு பெரும் பகுதியான புறமதிப்பீட்டை ரத்து செய்யும் வகையில் விதிமுறைகள் அமைந்துள்ளன. மற்ற எல்லாத் தேர்வுகளிலும் நூற்றுக்கு எழுபது, எழுபத்தைந்து வாங்கினாலும் ஏதோ ஒரு சிறு பிரிவில் சிறு கூறாகிய உள் மதிப்பீடு அவர்கள் தேர்ச்சியைக் கெடுப்பதால் மாணவர்கள் ஆத்திரம் கொண்டிருக் கிறார்கள். உள்மதிப்பீட்டு முறையையே எடுத்துவிட வேண்டு மென்று போராடுகிறார்கள்” என்று ஹெக்டே விளக்கினார். “இத்தகைய நிலை, ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரியில் இல்லை; ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்தில் இல்லை என்றால், இதில் ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும் அதை வெளிப்படுத்துங்கள்” என்று கேட்டேன்: தயங்கினார். மீண்டும் மீண்டும் கேட்டேன். தயக்கத்தோடு, 'துணைவேந்தரிடம் ஒளிக்கலாமா? தங்களிடம் சொல்லுவதை வெளிப்படுத்த வேண்டாம்” என்ற பீடிகையோடு உண்மையை வெளிப்படுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/705&oldid=788534" இலிருந்து மீள்விக்கப்பட்டது