உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்மதிப்பீட்டு முறை-சிப்கேடுகள் EB7 பேராசிரியர் பழி வாங்கினார் “பொறியியல் பயிற்சியில் மூன்றாம் ஆண்டில் தொடங்கும் ஒரு தனிப்பிரிவில் பேராசிரியர் ஒருவரின் உறவினர் ஒருவர் சேர விரும்பினார். போதிய மதிப்பு எண் இல்லாமையால் விரும்பிய பிரிவில் அந்த இளைஞருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் சினம் கொண்ட பேராசிரியர் வகுப்பில் உள்ள எல்லா மாணவர் களையும் குறைத்து மதிப்பீட்டுப் பழி வாங்கிக் கொள்கிறார்” என்று உண்மையைக் கூறினார். அப் பேராசிரியரின் பெயரையும் என்னிடம் குறிப்பிட்டார். குறை நீக்கப்பட்டது இரண்டொரு நாள்களில் சென்னைக்கு வந்த திரு. ஜி. ஆர். தாமோதரன் அச் செய்தியை உறுதிப்படுத்தினார். அவர் ஆலோசனைப்படி பொறியியல் பாடக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. நானும் அதில் கலந்துகொண்டு விவாதங்களைக் கவனித்தேன். உள் மதிப்பீட்டு முறை தனிப்பட்ட வெறுப்பு காரணமாகப் பழி வாங்குவதற்குப் பயன்பட்டுள்ளது. இது எல்லோருடைய கருத்துமாகும். என்ன மருத்துவம் செய்தார்கள்? “உள் மதிப்பிட்டு முறை தொடரட்டும்; புற மதிப்பீட்டில் தேர்வுக்கு வேண்டிய மொத்த மதிப்பெண் பெற்றுவிட்டால், உள் மதிப்பீட்டில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. புறமதிப்பீட்டில் மதிப்பு எண் குறைபவர்களுக்கு உள் மதிப்பீட்டு எண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம். இது அக் குழுவின் முடிவாகும்.” இது மாணவர் களுக்கு நிறைவைத் தந்தது. எனவே, என் வாய்ச்சொல்லை நம்பி, கல்லூரிகளுக்குத் திரும்பிப் போனவர்கள் தொடர்ந்து பயின்றார்கள் பதிவாளர் விடுமுறையில் சென்றார். ஊதிய உயர்வு கொடு! பதவிகள் தொல்லைகளின் தேக்கம். பொறியியல் மாணாக் கரின் சிக்கல் தீர்ந்தது என்று மலரும்போது, பல்கலைக் கழகப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு முறையிட்டார்கள். அதற்கு முன்பே பதிவாளர் திரு.சையத் யாகூப் தாம் வடஇந்திய யாத்திரை போக விரும்புவதாகவும், எனவே ஒரு திங்கள் விடுப்பு தரும்படியும், அவ் விடுப்பு முடிந்ததும் பதிவாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள உரிமை தரும்படியும் கோரும் விண்ணப்பம் ஒன்றை என்னிடத்தில் கொடுத்தார். புதிதாகச் சேர்ந்த நான், பல்கலைக் கழக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/706&oldid=788535" இலிருந்து மீள்விக்கப்பட்டது