உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EEE நினைவு அலைகள் நிலைமைகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கொடுப்பதற் காகவாயினும் சிறிதுகாலம் பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர் மறுத்துவிட்டார். . திரு.யாகூப், அரசுக் கல்வித் துறையின் கல்லூரிப் பிரிவில் துனைப் பேராசிரியராகச் சேர்ந்தவர். பணி அடிப்படையிலும் திறமை அடிப்படையிலும் கல்லூரி முதல்வர் பதவி வரை வளர்ந்தார். கல்லூரிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மூன்று ஆண்டு களப் பயிற்சி பெறாதிருந்தால், நிர்வாகப் பிரிவுக்கு மாறமுடியாது. அப் பிரிவில் உள்ள பெரும் பதவிகளைப் பெறமுடியாது. இது அப்போது இருந்த விதிமுறை. அத்தகையவருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று என் மனத்தில் பட்டது. எனவே, அரசுக்கு எழுதி விதிவிலக்குப் பெற்று, சில பேராசிரியர்களை நிர்வாகப் பிரிவிற்கு மாற்றிக் கொண்டேன். பேராசிரியர்கள் சை. வே. சிட்டிபாபு, முகமத்கனி, எஸ். பழனிச்சாமி, சையத் யாகூப் ஆகியோர் அப்படி வந்து, பதவி உயர்வுகள் பெற்றார்கள். சையத் யாகூப் கல்வி இயக்ககத்தில் என்னோடு பணிபுரிந்தபோது, முழு ஒத்துழைப்பு கொடுத்தவர், எனவே, அவர் பதிவாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பியதைப் பற்றி என்னுள் தப்பெண்ணம் எழவில்லை. அதே நேரத்தில் அவர் துணைவேந்தரால் நியமிக்கப்பட்டவர் அல்லர். பல்கலைக் கழக ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்டவர். எனவே, விடுப்பு, விடுவிப்பு இரண்டைப் பற்றியும் அக் குழுவே முடிவு செய்ய வேண்டும். எனவே அதை அக் குழுவின் முன் வைத்தேன். தற்காலிக ஏற்பாடு நியமன விதிகளின்படி பதிவாளர் உரிய முன்னறிவிப்புத் தர வேண்டுமென்று ஆட்சிக் குழு முடிவு செய்தது. அதனால் திரு. யாகூப்பிற்கு ஒரளவு சங்கடமே. யாகூப் விடுப்பில் போகும்போது, என்ன மாற்று ஏற்பாடு செய்வது? பல்கலைக் கழகத்தில் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த மூத்த அலுவலர்களாகிய டாக்டர் கோவிந்தராஜன், திரு. சி. கே. குமாரசாமி ஆகிய இருவரும் தத்தம் பிரிவில் முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வது என்பது தற்காலிக ஏற்பாடு. நியாயமான ஊதியக் கோரிக்கை பல்கலைக் கழகப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரியதில் நியாயம் இருந்தது. ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஊதிய விகிதத்தில் மாற்றமில்லை. தமிழக அரசு அவ்வப்போது வழங்கிய அகவிலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/707&oldid=788536" இலிருந்து மீள்விக்கப்பட்டது