பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-siruostulit-CD (pengo - :fi:GsGassi 689 படி, வீட்டு வாடகைப்படி போன்றவற்றின் உயர்வுகள் பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு எட்டவில்லை. ஒவ்வொருவரும் கணிசமான தொகையை இழந்து குமுறிக் கொண்டிருந்தனர். ஆனால், டாக்டர் லட்சுமணசாமி முதலியார் பதவிக் காலத்தில் போராட இயலவில்லை. நியாயத்தைக் கேட்க முடியாதபோது கொதிப்பு அதிகமாகும். தொல்லையான அந்நிலையில் நான் துணைவேந்தர் ஆனேன். எனவே, இப்பெரும் சிக்கல் என் தலைமேல் விழுந்தது. பணியாளர்களுக்கு நியாயம் வழங்கப் போதிய பணம் இல்லை என்று நிதி நிலை காட்டிற்று. கல்விப் பணிக்குக் கேடு இல்லாமல் கூடுதல் செலவில் எவ்வளவு பங்கை எப்படி பெறலாம் என்று நிதி அலுவலரிடம் விரிவாக ஆலோசித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர்க்கு ஊதிய உயர்வு, படி உயர்வு கேட்டார்கள் இடியையும் மின்னலையும் கண்டேன். பல்கலைக் கழக ஆசிரியர்கள் அனைவரும் சம்பளத்தைப் பொறுத்தமட்டில் பல்கலைக் கழக மானியக் குழுவின் இரண்டாம் திட்ட காலச் சம்பளத்தைப் பெற்று வந்தார்கள். அகவிலைப்படி போன்றவற்றில், முதல்திட்ட காலவிகிதத்தையே பெற்றார்கள். இதனால் ஒவ்வொரு வருக்கும் பெரும் இழப்பு. இப்படி நூறு திங்கள் பனம் இழந்த ஆசிரியர்கள் சாதுக்களாக வருவார்களா? சில இளைஞர்கள் முன் நிற்க, மூத்த பேராசிரியர்கள், சிலர் தவிர மற்றவர்கள் கையெழுத்திட ஆசிரியர் சங்கத்தின் சார்பில் விண்ணப்பம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அவ்வப்போது கொடுக்கப்பட்ட விகிதத்தில் பலவகை யான படிகளையும் கணக்கிட்டு, தங்களுக்குச் சேர வேண்டிய நூறு திங்கள் பாக்கியை உடனே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கை. அவ்வளவு நீண்டகாலம் கொடுக்காமலே சமாளித்து விட்டதால், நிர்வாகத்தின் நடவடிக்கை நியாயமாகிவிடுமா? பேட்டி காண வந்த ஆசிரியர்களிடம் பொறுமை காட்டினேன்; பரிவு காட்டினேன். “உங்கள் கோரிக்கையின் நியாயம் எனக்குப் புரிகிறது. நியாயத்துக்காகப் பாடுபடுவது என் இயல்பு. எனவே, உங்களுக்கு என்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வேன். நனைந்து சுமப்பது என்பது நாட்டு வழக்கு. எட்டாண்டுக்கு மேற்பட்ட பாக்கியைத் தீர்க்க எங்கிருந்து பணம் கண்டுபிடிப்பது? இதைப் பற்றியே ஆய்ந்து கொண்டிருந்தேன். பல்கலைக் கழகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/708&oldid=788537" இலிருந்து மீள்விக்கப்பட்டது