பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் - மணியம்மையார் மறைவு 755 பெரியார், “இவ்வளவு மதிப்பெண் பெற்ற பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைப் பிறர் தட்டிக் கொண்டு போய்விட மாட்டார்கள். ஆண்டுதோறும் நான் இரண்டொருவர்க்குப் பரிந்துரை தரும் வழக்கம். நீங்கள் வருவதற்கு முன்னரே நான் மூவருக்குப் பரிந்துரைத்துவிட்டேன். இது நான்காவதாக இருக்கும். என் பரிந்துரை மலிவாகிவிடும்” என்று பதில் உரைத்தார். தகவல் சீட்டைப் பெரியாரிடமே விட்டுவிட்டு, வந்தவர்கள் விடைபெற்றுக் கொண்டனர். சில வாரங்களுக்குப்பிறகு, முடிவுகள் வெளியாயின. சற்குருதாசின் மகளுக்கு இடம் கிடைத்தது. அக் குடும்பத்தினர் மீண்டும் பெரியாரைக் கண்டு. மாலை அணிவித்து, பழங்களை வழங்கி நன்றி கூறினார்கள். பெரியார் அவர்களை அமர வைத்து, o "மெய்யாகவே சொல்கிறேன். நான் உங்கள் மகளுக்குப் பரிந்துரைக்கவில்லை. தகுதி பற்றி அவரைத் தேடி, மருத்துவக் கல்லூரி இடம் வந்திருக்கிறது” என்று விளக்கம் சொன்னார். 'அவ் வேளையில்கூட தாம் செய்யாததைச் செய்ததாகக் காட்டிக் கொள்ள இசையாத பெரியார், உண்மையான சத்தியசிலர். இப்படியிருக்க அவர் நாத்திகராயிருந்தால் என்ன?’ என்று கூறி நெஞ்சுருக உரையாற்றினார். மணியம்மையாரின் மறைவு பெரியாருக்குப் பின் திராவிடர் கழகப் பொறுப்பேற்ற திருமதி: ஈ. வெ. ரா. மணி அம்மையார், சில ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்தபோது நான் கோவைக்கு இந்திய சோவியத் கலாசாரப் பணிக்காகச் சென்றிருந்தேன். அம்மையார் மறைந்த செய்தி கேட்டதும், சென்னைக்குத் திரும்பினேன். பெரியார் திடலுக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினேன். அன்று மாலை தந்தை பெரியாரின் பக்கத்தில் அம்மையாரை அடக்கம் செய்தபோது, அங்கிருந்து கண்ணிர் அஞ்சலி செலுத்தினேன். இருமுறையும் என்னோடு காந்தம்மாவும் வந்து துக்கத்தில் பங்கு கொண்டார். - மணியம்மையார் 1949இல் பெரியாரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கைத் துணையாக மாறியதால்தான், பெரியார் 95 வயதுவரை வாழ முடிந்தது என்பது மிகை அல்ல. பல நோய் களுக்குட்பட்ட பெரியாருக்கு நேராநேரத்தில் பத்தியமான உணவு வகைகள் கொடுக்கும்படி பார்த்துக் கொண்டவர் மணியம்மையார். மருந்துகளைத் தவறாமல் சாப்பிடுவதைக் கண்காணித்து உதவி புரிந்தவரும் அவரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/774&oldid=788611" இலிருந்து மீள்விக்கப்பட்டது