உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ነፃፀ நீதிநெறிவிளக்கம் புறங்கடைய என்னுங் குறிப்புமுற்று து என்னும் ஈறு குறைங் தது. பன்மையெனவைத்துக் களிறென்னும் பால்பகா வஃறிணைப் பெயரைப் பன்மையாக் கொள்ளவுமாம்.” -ஊ. பு. செ. ' களிறு புறங்கடைய - உயர்வுபற்றி ஒருமைப்பால் பன்மைப்பாலாய் வந்த வழுவமைதி துவ்விகுதி தொகுத்த லெனக்கொண்டு வழாநிலை யாகிய ஒருமை எனினும் ஒக்கும்.” -கோ. இ. பூட்கை-' மேற்கோள் ; இதற்குப் புழைக்க்ையை யுடைய எனவும், கிம்புரிப் பூணணிந்த எனவும் பொருள் கூறுவாருமுளர். மேற்கோள் என்பது எடுத்த தொழிலைச் சாதிப்பதற் கேற்ற ஆற்றலுடைமை. ' ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி யென்ருர் நக்கீா தேவரும்.” -வி. கோ. சூ. ' பூட்கை - துவாாமுடைய கை ; இது அன்மொழித் தொகையால் யானைக்குப் பரியாயமாய் வருதல் காண்க.” -தி. சு. செ. இஃது எடுத்துக்காட்டுவமையணி. The noble wait not in attendance at the royal court; and there are some others, who have no enjoyment in waiting there. The cat frequents the splendid Zenana, while the hollow-handed elephants, which can tear up the pillars to which they are bound, remain without the gate. —H. S. The great will not dance attendance at the Court of the king. The mean will rejoice to stand in waiting at the Court. The cat lives in the splendid apartments of the palace. The powerful elephant which breaks the post to which it is tied stands at the entrance. —C. M. The noble dance not attendance at the Royal Court and yet are honoured ; there are others who wait there for ever and are not honoured ; the cat frequents the inner courts where queens reside, while the valiant elephant that can tear up the pillar to which it is tied, remains outside the gate. —T. B. K.