பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நீதிநெறிவிளக்கம் யுளதோ ? இன்னும், நோக்கார் பேனரிவைகளை வினை முற்ருக்கிப் பேதைமை யென்ற தெப்பெண்ணினையு மெனக் கொண்டு கற்பினை யுடைய மகளிாது பிறப்பும் பெரும்பாவங் காரணத்த காதலின் எனினும் அமையும்." -சி. வை. தா. நிறையுடைமையாகிய கற்பே பெண்மைக்கு இயல்பா யமைந்த உயிர்ப்பண்பாதலாலும், அதனினும் சிறந்தது நாண் ஆதலாலும் அவ்விரண் டும் இழந்த பெண்மை பெண்மையாகாது பேதைமையேயாம். பெண் பேதைமைக்குப் பெற்றிமை, அதாவது இயல்பாயமைந்த பண்புகள் கிறை யின்மையும் நாணின்மையுமேயாம் என்பது இதனம் பெறப்படும். இதனை வலியுறுத்தற்கே இவ்விரண்டும் ஒழிந்த, ' பிறிதொரு பெற்றிமை பேதைமைக் குண்டே' என்று அழுத்தமாகக் கூறி, வேறு இல்லை என முடித்தார் ஆசிரியர். அவ்வாறு முடித்தமையினலே, பாந்த வுள்ளம் ப்டைத்த ஆசிரியர் கற்பின் மகளிர் பிறப்புப் பெரும்பாவம் என்றிாங் கினர். இனி, மேல் எக-ஆம் செய்யுளில் காமங் கதுவப்பட்ட ஆண் பிறப்பைச் சுட்டிய ஆசிரியர் ஈண்டுக் காமங் கதுவப்பட்ட பெண் பிறப்பைச் சுட்டியமை உய்த்துணர்க. முறையும் குடிமையும் பான்மையு நோக்கார் : முறை நோக்கலாவது இவர் நமக்கு இன்ன முறையின மெனக் கருதுதல்.” -அ. கு. : குடிமை-குடிப்பிறப்பு, பெண்ணெனப் படுவ கேண்மோ, பீடில பிறப்பு நோக்கா' (சீவக. 1597). -உ. வே. சா. பான்மை- ஒருவனுக்கே உரிமையாய் நிற்றல்.” -அ. கு. இதற்கு (ஜாதியினது) வகுப்பு.’ என்று கோ. இராஜகோபாலப் பிள்ளையும் ; தமது தன்மையும் பிறரது தன்மையும் ” என்று தி. சுப்பாாயச் செட்டியாரும், தகுதியும் ” என்று சி. வை. தாமோதாம் பிள்ளையும் உாைத்தார்கள்.

பான்மை - வருணத்தின் தன்மை ; பால் . வருணம் ; ' வேற்றுமை தெரிந்த காம்பாலுள்ளும் ' (புறநா. 188 ; 8) ' -உ. வே. சா.

நிறையு நெடுநாணும் பேணுர் :

நிறையாவது கற்புநெறியிலே மனத்தினை கிறுத்துதல். '

-அ. கு.

நெடுநாண்-நெடுங்காலமாக உள்ள நாணம், ' நானேடுடன் பிறந்த நான் ” முத்தொள்ளாயிரம்-98), ' என்னெடும் வளர்ந்த, பொற் பார் திருநாண் ' (திருச்சிற்றம்பலக் கோவையார்-208) என்று கூறப்படு தல் காண்க. ' -உ. வே. சா.