பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நீதிநெறிவிளக்கம் நெடும்பகல் கற்ற : நெடும்பகல்-'பகல் - ஒரு நாளிலிருந்து பகுக்கப்பட்ட பாதியான படியால் இப்பெயர் பெற்றது. இது வினையடிப் பகுபதப் பொருட் பெயர்.” -சி. மு. ' பகல் - பகு பகுதி. இருளைப் பகுத்து நீக்குதலிற் பகலெனப் பட்டது ; பகை, பகுதி, பகவு என்பனவுங் காண்க.” -வி. கோ. சூ. கற்ற- இறந்தகால வினையாலனையும் பெயர். இனிக் * கற்ற ’’ வென்பதனைப் பெயரெச்சமாக்கி ' உட்குவரும் ” என்பதனே டடுக்கிக் ' கல்வி யென்னும் பெயரோடு மாட்டி முடிப்பாரு முளர்.” -வி. கோ. சூ. உடைந்துளார் உட்கு வருங்கல்வி : உடைந்துளார்- ஒருசொன் னிர்மைத்து. இதன்கண் உள் ” என்பது துணைவினை.” -வி. கோ. சூ. உட்குவரும்- உட்கு - அச்சம். அது துதல்வியர்த்தன் முதலிய பற்றி அறியப்படுவது.” அ. கு. ' உட்கு - வெட்கம். பெரும்பான்மையும் வெட்கத்தை யடைங் தவர் தமக்குட் சுருங்கி (உள்ளடைந்து) போவதனல், இப்பெயர் வெட் கத்திற் காயிற்று ; இது குறிப்பு வினைப்பெயர். உள் - பகுதி. -சி. மு. கடும்பகல் ஏதிலான்பாற் கண்ட இல்லினும் பொல்லதே : கடும்பகல்-' கடுமைப் பண்பு கடுகட் பென்பதிற்போல மிகுதியை யுணர்த்தியது.” -கோ. இ. ' பெரிதும் விளக்க முடைமையால் உச்சிக்காலம் கடும்பக லெனப் பட்டது. கடி - விளக்கம் ” -அ. கு. விளக்கத்தையும் மிகுதியையும் ஒருங்குணர்த்த பட்டப்பகல் ' எனப் பொருள் கொள்ளப்பட்டது. ஏதிலான்பால்-ஏ கிலான் என்பது முறை முதலிய ஏதுமில்லா தவன் ’ என்னும் பொருள்பட கின்றது.” -சி. மு. ' எகிலான் - பண்படியாகப் பிறந்தபெயர். ஏதில் பகுதி. ஆன் ஆண்பாற் படர்க்கை விகுதி. சம்பந்தம் யாதும் இலானென்பது பொருள். எது வென்பதற்குக் காரணமெனப் பொருள் கூறின், அது வடமொழி யாதலான் உகாங் கெடாது வால்வேண்டும் என மறுக்க. ஏ. கிலான் பால் என்றது இடக்காடக்கல்.” -கோ. இ .இல்லிலிருப்பவளை இல் என்பது இடவாகுபெயர்.”-சி. էԲ ، ، لانه بع) பொல்லாதே-'வருந்தித் தேடிவைத்திருந்தும் உற்ற சமயத்தி லுதவாமைபற்றிப் பொல்லாதே என்ருர்.” -அ. கு .