பக்கம்:பாற்கடல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

போன பக்கங்களில் நான் பயணத் தண்டவாளத்திலிருந்து பக்கவாட்டில் பிரிந்துவிட்டேனோ என்று பாடுபடுகிறதோ? இல்லவே இல்லை. இந்த வரலாற்றின் வழியே இப்படித்தான். நீயும் நானும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கிறோம்.

அண்டை வீட்டு மாடிக்குப் பேரக் குழந்தைகள் விளையாட அப்பப்போ ஓடினாலும் ராத் ‘தாச்சுக்கல்’ தன் மடியில்தான் என்று பெந்துப் பாட்டி அறிவாள். எங்களுக்கும் தெரியும்.

பூரா, நாம் ருசியிலேயே வாழவில்லை, பூராப்பூரா ருசியின் நினைப்பிலும் வாழவில்லை. வாஸனைகளில் வாழ்கிறோம் என்று என் துணிபு. மூச்சில் ஏதேதோ மோப்பங்கள் தாமே வந்து கலக்கின்றன. பிராணன் புதுப்பித்துக் கொள்கிறது. சரி; பிறருக்கு எப்படியோ, என் உடல், மனப்பாங்கு, நான் வளர்ந்த சூழ்நிலைப்படி, இந்த வாஸனைத் தத்துவம்தான் எனக்கு வாழும் தத்துவமாக நிலைத்துவிட்டது. ஆனால் எல்லாருக்கும் இதுதான் பாதை என்று நான் படிக்க வரவில்லை.

அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, வாஸனை ? அதென்ன வாஸனை? இதோ அதற்காக ஒரு கதை. கதையல்ல; சொந்த அனுபவம். சுமார் இருபத்துஐந்து வருடங் களுக்கு முன் - ஏன், மேலேயே இருக்கும் - இரவு சுமார் 10-30 ரேடியோ அலறிக்கொண்டிருக்கிறது. (வழக்கப் பிரகாரம்தான், முடுக்கிவிட்டு அவரவர் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். வம்பு அளந்துகொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/58&oldid=1533289" இலிருந்து மீள்விக்கப்பட்டது