உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ 95 — புடைத்துப் பொருமின பாவலர் பாவால்! பாரதி தாசன் புரட்சிப் பாவலன்! ஊரதிர் வுண்டதே அன்னவன் உணர்வால் : மூலை முடுக்கெலாம் அதிர்ந்த தவன்குரல்: வையம் ஆண்ட வண்டமிழ் மரபேl கையி ருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொளுக் கடல்போல் மாப்பகை மேல்விடு! நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு. பொன்மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை "சிறுத்தையே வெளியில் வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனப் புறப்படு’ மனிதரில் நீயுமோர் மனிதன்: மண்ணன்று. இமைதிற! எழுந்து நன்ரு ய் எண்ணுவாய்! தோளே உயர்த்து சுடர்முகம் தூக்கு! மீசையை முறுக்கி மேலே ஏற்று! . விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்! நகைப்பை முழக்கு, நடத்து உலகத்தை! சொற்களா இவை இலை; உணர்வுப் பிழம்புகள்! எஃகுக் குழம்பில் ஈட்டியைத் தோய்த்துக் கருங்கற் பாறையில் எழுதிய வரிகள்: வருங்கா லத்துத் தமிழினத் துக்கும் தாங்கா வெப்பத் தணல்வரிப் பாக்கள்! சங்கிது நாள்வரை எழுந்திடா உணர்வுt தமிழர் மடிதுயில் நீக்கிய வெந்தணல்