பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 乐鲨。一” 1932 வாரிவயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான்’ புதினம் வெளியிடல் வெளியார் நாடகங் கட்கும், தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல். 1933-ம, சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக்கட்டடத் தில் (31-2-33) நடந்த நாத் தி க ர் மாநாட்டில் கலந்துகொண்டு வருகைப்பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதிக் கையெழுத்திடல். 1933-மூன்ரும் மகள் இரமணி பிறப்பு 1934-மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தாம், குருசாமி. குஞ்சிதம், நயின சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம்நடராசன், சாமி சிதம் பரளுர், எசு.வி.லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு-பாடல் பிறந்தது. 9.9.34இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல். (குருசாமி- இரணியன்: திருவாசகமணி கே. எம். பால சுப்பிரமணியன்- பிரகலாதன்) 1935-இந்தியாவின் முதல் பாட்டேடான, சிரிசுப்பிர மணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர் எசு.ஆர்.சுப் பர மணி யம். (சர்வோதயத் தலைவர்) 1936-பெங்களுரில் பதினன்கு நாள் தங்கி (1-4-36) தேசிங்கு ராசன் வரலாற்றை அட்கின்சு குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்க' இசைத்தட்டுகளில் பதித்தல். 1937-இல் புரட்சிக்கவி-குறுப்பாவியம் வெளியிடல். 'பாலாமணி அல்லது பாக்காத் திருடன் திரைப்படத்திற்குக் கதை,உரையாடல், பாடல் எழுதுதல் இதில் நடித்தவர்கள் டி.கே. சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.