உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1938-பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்துாசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி:கி. நாராயணசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கிய தால், பெரியார், தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்' என்று பாராட்டினர். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய 'தமிழரசு’ இதழில் தொடர்ந்து எழுதுதல். தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் விந்தன்'; 1989 - கவி காளமேகம் திரைப்படத்திற்குக் கதைஉரையாடல், பாடல் எழுதுதல் இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ -நூல் வடிவில் வருதல். 1941-எதிர்பாராத முத்தம்'.பாவியம் காஞ்சிபொன்னப் பவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல், இதற்கு மேலட்டை ஓவியம் இராய்சவுத்ரி. 1942-குடும்பவிளக்கு -1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறை முகமாக ஊக்குவித்தல்: இரண்டாம் உலகப்போரை இட்லரை - எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்: 1943-பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல் 1944-பெரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். இன்ப இரவு' (புரட்சிக் கவி) முத் தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு', காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் ஒன்ருய் வெளியிடல், ‘சதிசுலோசன என்ற திரைப்படத்திற்குக் கதை, உரை யாடல், பாடல் எழுதுதல், குடும்ப விளக்கு -2 வெளியிடல். செட்டிநாடு முழுதும் இலக்கியச் சொற்பொழி நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல், கலேவாணர்