உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 106 - முழுமை நிலாவை மேலும் காண்கிருர்: கொழுமை அழகுக் குலாவலைப் பாருங்கள்: சிறுவர்க் கிதனைச் செப்பிப் பாருங்கள்! உருவம் மாறும்; உணர்வும் பெருகும்! "முழுமை நிலா! அழகு நிலா! முளைத்தது.விண் மேலே-அது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தாற் போலே! அழுதமுகம் சிரித்ததுபோல்அல்லி விரிந்தாற்போல்-மேல் சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டு தொத்திக் கிடந் தாற்போல்! குருட்டு விழியும் திறந்ததுபோல் இருட்டில் வான விளக்கு-நம் பொருட்டு வந்தது. பாடி ஆடிப் பொழுது போக்கத் துவக்கு மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்! மயிலின் தோகை விழிகள்!-பிற தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும் சேர்த்து மெழுகும் விழிகள்' எப்படி அவரின் நிலவுக் காட்சி? . இப்படி யாநாம் எழிலக் காண்கிருேம்: - காட்டைப் பற்றியவர் கழறுதல் கேண்மின் காட்டையே கண்முன் நிறுத்துதல் காண்மின்:

  • முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்-எதிர்

முட்டுகருங் கற்களும் நெருங்கும்-மக்கள் இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே கால்களில் தடுங்கும்-உள்-நடுங்கும்!