பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 109 — "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்ருய் ஒளிமுகத்தை! கோலமுழு தும்காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அமுதஊற்ருே: காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ?" புலவர் பாடல் தீட்டுவ தற்கே எழுதுகோல் எடுத்தார்; ஏடும் எடுத்தார்! வந்த கற்பனை வடித்துத் தருகிரு.ர். எந்தப் புலவன் இப்படி எழுதின்ை! 'ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்! ஒடையுந் தாமரைப் பூக்களும் தங்களின் ஒவியந் தீட்டுக என்றுரைக்கும்! காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும். ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயர் அன்பினைச் சித்திரம் செய்க, என்பார்!" சோலைக் குளிர்தரு தென்றல் வரும்:பசுந் தோகை மயில்வரும் அன்னம் வரும்; மாலையில் மேற்றிசை வானத்திலே விழும் மாணிக்கப் பரிதி காட்சி தரும்! - வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர் வெற்பென்று சொல்லி வரைக எனும்! கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து கூவின என்னை இவற்றிடையே, இன்னலிலே தமிழ் நாட்டினிலே உள்ள என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.