பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 109 - அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே! இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக் கும்நிலை எய்திவிட்டால், துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில் தூய்மையுண் டாகிடும், வீரம் வரும்!” புதுவைப் புலவன் கற்பனை வளத்தில் எதுவெடுத் துரைப்பேன்; எதனை விடுப்பேன்! கற்பனைத் தேறுை! கவின்நிலா வானம! பொற்புனைந் தெடுத்த புதுமணப் பூக்கள்! 'முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை’ என்று, அவர் காயும் தலைவியின் ஏசலில் நின்ற கற்பனை நினைத்து மகிழ்மின் மேலும் அத்தலைவி பகலினைக் கடிவாள்! ஏலுமா நமக்கு? இத்தகு கற்பனே! "மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெந்து நீருகாமல் இருப்பதொரு வியப்பே' பாரதி தாசன், தன் உள்ளக் கொதிப்பைப் பாரதிர முழக்குதல் பாருங்கள் இங்கே . "மண்மீதில் உழைப்போ ரெல்லாம் வறியராம்: உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர்செல் வராம்:இ தைத்தன் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டந்திக் குப்பின் விண்மீதில் கொப்பளித்க விரிவானம் பாராய் தம்பி