பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 110 - எப்படி? அவர்தாம் இயம்பிய கற்பனை? இப்படிப் புரட்சியாய் எழுதிய தவர்மனம்! அடுத்து, ஒரு புலவருக் கிருக்கும் ஆற்றல் எடுத்தது உவமையால் விளக்குதல்; இல்லையா? பாவேந்தர் உவமைகள் பழுதிலா உவமைகள். பொரியலோ பூனைக்கண்போல் பொலிந்திடும் என்பார். 'குத்துண்ட கண்ணுடி கொண்டபல வீறல்கள்போல் துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி ஏனழுதாய்' -என்று கேட்பார்! கேள்வியால் அகலும் மடமைபோல் தள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது’ என்றே அறிவோடு உவமையைப் பொருத்துவார். பரிதியின் வரவ்ால் இருள்வில கியதை, - தொட்டியின் நீலத்தில் சுண்ணும்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. என்பார்! -இங்கோர் ஏழைக் குடிசை! - மிகவும் சிறியது; மிகமிகச் சிறியது! புகவும் இயலாப் புன்மைக் குடில்அது! எப்படிச் சொல்வீர் அதனே? எண்ணுங்கள்! அப்படிச் சொன்னல் அனைவர்க்கும் விளங்குமா? இப்படிச் சொன்னல் எல்லார்க்கும் தெரியுமா? என்றே எண்ணி, எண்ணி இயம்புதற் கொன்றும் இயலாமல் உழல்கையில் சொல்வார்: கனன் புகுந்தாலும் குனிந்து புகும்குடிசை எப்படி அவர்தம் உவமை இயல்திறம்