பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 111 – சிட்டுக் குருவியை எல்லாரும் கண்டோம்! கொத்தும் அதன்முக்கு முல்லை யரும்பு! மல்லி பிளந்தது போன்றது. அதன் கண்' என்றுசொன் ளுேமா? பாவேந்தர் சொன்னர்! பின்னிய ஆடை காற்றில் பெயர்ந்தாடி அசைவ தைப்போல் நன்னீரில் கதிர் கலந்து தளிர்கடல் நெளிதல் கண்டார்! தாம்கண் டோமா? நறுக்கென ஊம்எனும் முன்னே, உவமையால் விளக்கிய புலவன் பாரதி தாசனைப் போல சிலபேர் இருப்பார்; பலபேர் இருக்கார்! 'காலுக்குப் புன்னேயிலே போலும் செறுப்பணிந்து கையில் விரித்தகுடை தாக்கி-நல்ல கல்விக் கழகமதை நோக்கி-காய்ச்சும் பாலுக்கு நிகர்மொழிப் பாவைநீ செல்லுவதைப் பார்க்கும் இன்பந்தானடி பாக்கி: . மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற் ருடைகட்டி வீட்டினின்றும் ஆட்டமயில் போலே-கைம் மேற்சுவடி யோடுதெரு மேலே-கூர் வேலுக்கு நிகர்விழி மெல்லிசெல் வதைக்கான வேண்டுமே இப் பெற்றவள் கண்ணுலே! மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே நீ மங்கை எனும் பருவம் கொண்டு-காதல் வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு-காட்டித் தேவை இவன் எனவே செப்பும்மொழி எனக்குத் தேன் கனி தித்திக்குங்கற் கண்டு”