பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— i ! 3 — ‘கட்டிவெல்லத்தைக் கசக்கு தென்ருள்-அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்ருள்: தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னுள்!-அவன் தோளே அவள் ஒடித் தேய்த்து நின்ருள்!” 'கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்’ என்ருள்! தொட்டியின் தண்ணிர் கொதிக்கு தென்ருன்- நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு தென்ருன். இசைத்தேனில் காதலைப் பிசைந்த பாக்கள்! பேச்சுப் போலவே பாநடை யிருக்கும்! மூச்சுப் பிடித்துப் பாடிட வேண்டா! இதோ பாருங்கள் பாநடை எழிலே! 'கிழக்கு வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம் வழக்கப் படிவீட்டு வாயிற் படிதுலக்கிக் கோல மிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே ஏழுமணிக் காலை எழுந்தாள் அவள்மாமி ‘வாழுகின்ற பெண்ணுநீ வாடி என்ருள் தங்கத்தை! 'இந்நேரம் தூங்கி இருந்தாயா? என்பிள்ளை எந்நேரம் காத்திருப்பான் இட்டவிக்கும் காப்பிக்கும்? என்றே அதட்டி இழுத்துத் தலைமயிரை நின்ற பொற்பாவை நிலத்தில் விழச்செய்தாள்.” எப்படிப் பாநடை? யாப்பெலாம் இவர்க்கு . ஒப்பஅடி போட்டே உடன்வர வில்லையா? புலவர்க்குத்தான் தமிழ் என்ற போக்கினை இலையென் ருக்கிய ஈடிலாப் பாவலர்! இப்படிப் பாத்திறன்! அடுத்தது இயற்கை, ஈடு பாட்டினை இயம்பவே வேண்டா! பாடு பட்டே இயற்கையைப் பாடும் கேடுகெட்ட கீழ்மைப் புலவர்கள். -போல்இல்லை இந்தப் புரட்சிப் புலவன்!