பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 114 -- ஒலைச் சுவடிக் காலத்தும் இவன்போல் இயற்கையைப் பாடுவோர் அரியராய் இருந்தனர்! எடுத்துக் காட்டாய் இரண்டொரு பாடல்கள் மடுத்துக் கேட்போம்! மாண்பது விளங்கும்! காலை, கதிர், கடல், செம்பொன் வானம்! கோலக் காட்சியைப் பாவலன் கூறுவான்: எழுந்தது செங்க திர்தான் கடல்மிசை அடடா எங்கும் விழுந்தது தங்கத் தூறல்! வெளியெலாம் ஒளியின் வீச்சு!’ ‘அழகின் சிரிப்பு’ எனும் நூல்,அவர் சுவைத்த இயற்கை ஓவியக் கோப்பென் றியம்பலாம்! அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல் அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தை உடல் ஒவ்வொன்றும் சிலிர்க்கச் செல்வம் ஒன்று வருமதன்பேர் தென்றற் காற்று!’ இருள்போய் ஒளிந்த இடத்தைத் தேடி அருள்தோய் பாவலர் அடைந்ததைக் காண்மின்! 'அடுக்கிதழ்த் தாம ரைப்பூ இதழ்தோறும் அடிப்புறத்தில் படுத்திருப் பாய், நீ-என்றே இருளினைப் பாடுகின்ருர்:

  • களிச்சிறு தும்பி பெற்ற கண்ணுடிச் சிறகில் மின்னித் துளிச்சிறு மலர்இ தழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி, வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையா டிப்போய்க் கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்ருய் தென்ற லே,நீ!