உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— I l 5 — செருந்தி, ஆச்சா, இலந்தை தேக்கீந்து, கொன்றை, எல்லாம் பெருங்காட்டின் கூரை! அந்தப் பெருங்கூரை மேலே நீண்ட ஒரு மூங்கில்; இரு குரங்கு கண்டேன் பொன் னுரசல் ஆடல்: ஆனையொன் றிளம ரத்தை முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப் பூனையொன் றணுகும்; அங்கே புலியொன்று தோன்றும்; பாம்பின் பானைவாய் திறக்கக் கண்டு யாவுமே பறக்கும்; கன்ருே மானேக் காணுது நிற்கும்! அதை ஒரு நரிபோய் மாய்க்கும்! கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்குதொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென இழுத்ததைப் போல் கிளைதொறும் தாவித் தாவி விழுதெல்லாம் தொங்குகின்ற ஒளிப்பாம்பாய் எண்ணி அஞ்சி உச்சிபோய் தன்வால் பார்க்கும்!” காட்டிடை நடந்ததொரு காட்சியைப் பாவலர் காட்டும் வகையிது காணுங்கள் மேலும்! அருவிகள் வயிரத் தொங்கல்! அடர்கொடி பச்சைப் பட்டே' குருவிகள் தங்கக் கட்டி! குளிர்மலர் மணியின் குப்பை: குறத்தியர் கவண்ண டுத்துக்