பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 125 — அகப்பொருள்படி அதன்படி புறப்பொருள்படி நல்ல படி புகப்புகப் படிப்படியாய்ப் புலமைவரும் என்சொற்படி-நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி’ எப்படி? படிபடி! எத்தனைப் படிகள்? செப்படி வேலையா, சொற்படி கட்டுதல்? எழுதிப் பாருங்கள்: இழுப்பு தெரியும்! பாராதி தாசனேர் புலவன என்டான். பாரதிர முழக்குவேன்! பாரதி தாசன் உன்னை விட,உன் அப்பனை விடவும் மன்னதி மன்னன்! பாட்டிலே மன்னன்! பொழுதிருந் தால், நான் புரட்டிக் காட்டுவேன்! அழுமூஞ்சி களுக்கே அடிமுடி தெரியுமா? எதுகைத் தொடையால் எம்பா வேந்தன் புதுவகைப் பாநடை புனைந்து காட்டின்ை! சத்தி முத்தப் புலவர் மாக்கதை! பத்தன்று; ஒன்றைப் பகர்வேன் கேளுங்கள்: அரசி இரவெலாம் அரசனின் வரவை எதிர்பார்த் திருந்தாள்! இவனே விடியலில் பள்ளி எழுச்சி பாடுவான், வந்து! 'இருள் மடிந்தது! கூவும் சேவல் கழுத்தோ ஒடிந்தது! கதிரொளி எங்கும் 4 படிந்தது: துயில் எழுப்புவோரின் - இசைத்தேன் காதில் வடிந்தது! பெண்ணே விழி, பொழுது விடிந்தது! கதவைத் திறந்து அரசி சொல்கிருள்: - இரவுநான் துரங்கியபின் வந்தீர்கள் போலும்! வழிபார்த் திருந்தன. இருவிழி வேலும்!