பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 126 — உலாவி அலுத்தன என் இரு காலும்! துவண்டு போயிற்று என் இடை நூலும்! ஆறிப் போயிற்று பாலும்! அழகு குன்றின முப்பழத் தோலும்! வாடின கட்டிலில் மலர் வகை நாலும்! கண்விழிக்க எவ்வாறு ஏலும்! மேலும்! மேலும்!" எத்துணை இனிய சொற்கள்? எத்துணை வரிமை பாட்டில்! எத்துணைக் கருத்துத் தேட்டம்! எத் துணை நயங்கள்! இன்பம்! எத்துணை யளவு கல்வி யறிந்தவர் எனினும் பாட்டை எத்துனே எளிதாய்ப் பாடி இலக்கிய இன்பம் காண்டார்? புலமக்கள் கண்ட இன்பம் பொதுமக்கள் காணு மாறு சிலபல சொற்க ளாலே செய்தவர் பாவின் வேந்தர்! இலைஇலை என்பார்க் கின்னும் எடுத்தெடுத் தீவேன்; ஆளுல் நிலையிலை நேரம், ஆக மொழித்திறம் நிறுத்து கின்றேன். அடுத்தது புரட்சி யுள்ளம்! பாவலர்க் கதுதான் நற்பேர் கொடுத்தது; அவர்க்கும் பீடு கொடுத்தது! தமிழ்ச்செம் மாப்பால் எடுத்தது. நேற்றும் இன்றும் - இருக்கின்ற புலவர் யார்க்கும் மடுத்திலாப் பெரிய செல்வம்! மற்றதன் சிறப்பைப் பார்ப்போம்!