உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 127 — ‘விடுதலை பெறுவது முதல்வேல! அடிமையில் உழல்வது முடியாது! விழிதுயில் வதுமிகு தவருகும்-எழுவீரே!” செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! என்றே குயிலைக் கூவச் செய்தவர்! 'சாதி ஒழிந்திடல் ஒன்று-நல்ல தமிழ் வளர்த்தல் மற்ருென்று! பாதியை நாடு மறந்தால்-மற்ற பாதி துலங்குவ தில்லை!" சாதிமேல் அடித்த சம்மட்டி அடியிது! 'இந்த உலகில் எண்ணிலா மதங்கள்! கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்! சாதிக்குச் சாவுமனி அடிக்க!” சாதிக்கு அடித்த சாவு மணியிது அடக்குமுறை செய்திடல் முடியும்-கொள்கை அழிக்குமுறை எவ்வாறு முடியும்? . ஒடுக்குசிறை காட்டுதல் முடியும்!-உணர் வொடுக்குதல் எவ்வாறு முடியும்: அடக்கு முறைமேல் அடித்த அடியிது! "தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழ னுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்! தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை. தமிழ்த்தொண்டு செய்வோர்க்குத் தந்த துணிவிது! சிம்புட் பறவையே சிறகை விரி,எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம் திறlவிழி! இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?